பிரித்வி 2 ஏவுகணை சோதனை சக்ஸஸ்!... இந்திய ராணுவம் அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

பலசோர்: அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்ட பிரித்வி 2 ஏவுகணை ஒடிஸா கடற்கரையில் நடத்தப்பட்ட சோதனையில் வெற்றி அடைந்ததாக இந்திய ராணுவம் கூறியுள்ளது.

பிரித்வி 2 ஏவுகணை ஏற்கெனவே இந்திய ராணுவத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஏவுகணையை ஒடிஸா மாநிலம், பலசோர் மாவட்டத்தில் உள்ள அப்துல் கலாம் தீவில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

Indian Army announces Prithvi-II's test fired success

இந்திய ராணுவத்தின் ஸ்திர படைகள் காமான்டர்கள் சோதனை செய்தனர். அப்போது கடற்கரையிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை மிகவும் துல்லியமாக தனது இலக்கை அடைந்தது.

இந்த ஆண்டில் நடத்தப்படும் மூன்றாவது ஏவுகணை சோதனை இதுவாகும். இதே இடத்திலிருந்து இந்த ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதி அக்னி- 5 ஏவுகணையும், பிப்ரவரி 6-ஆம் தேதி அக்னி 1 ஏவுகணையும், பிப்ரவரி 7-ஆம் தேதி பிரித்வி 2 ஏவுகணையும் வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி பிரித்வி 2 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏவுகணை 80 டிகிரி ஆங்கிளில் செல்கிறது. மேலும் 500 கிலோ எடையை தாங்கும் சக்தி கொண்டது. திரவ எரிப்பொருளால் இயங்கும் தன்மை கொண்டது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை டிஆர்டிஓ உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

9 மீட்டர் உயரம் கொண்ட இந்த ஏவுகணை 350 கி.மீ. தூரம் வரை தாக்கும் வல்லமை கொண்டது. கடற்படையினரின் பிரித்வி 2 ஏவுகணை தனுஷ் ஏவுகணை என்று அழைக்கப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
India on Wednesday test-fired surface-to-surface ballistic missile Prithvi-II off the Odisha coast

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற