For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆப்கனில் கடத்தப்பட்ட தமிழரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது! சந்தேக நபர் ஒருவர் கைது!!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஆப்கானிஸ்தானில் தமிழக மதபோகர் பிரேம்குமார் கடத்தி வைக்கப்பட்டிருக்கப்பட்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அகதிக குழந்தைகளுக்கான கல்விப் பணியில் ஈடுபட்டிருந்தார் தமிழகத்தைச் சேர்ந்த அலெக்ஸிஸ் பிரேம்குமார். அவரை ஆப்கானிஸ்தானின் ஹேரத் நகரம் அருகே ஆயுதம் தாங்கிய தலிபான் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.

கடந்த இரண்டு நாட்களாக அவரைத் தேடும் பணியில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதரகமும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில் பிரேம்குமார் கடத்தலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மதபோதகர் பிரேம்குமார் கடத்தி வைக்கப்பட்டுள்ள இடத்தை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
The Afghanistan forces have arrested a man in connection with the abduction of 47-year-old Indian national, Father Alexis Prem Kumar Antonysamy. Sources in the Afghanistan Police, meanwhile, said Father Kumar has been located in the Gilan district of Herat, the capital of the western province of the same name.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X