For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொடர் கடற்படை கப்பல் விபத்துக்கள் - கடற்படைத் தலைமைத் தளபதி ஜோஷி ராஜினாமா

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் சிந்து ரத்னா நீர்மூழ்கிக் கப்பலில்ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து கடற்படைத் தலைமைத் தளபதி டி.கே.ஜோஷி, கடற்படை கப்பல்கள் தொடர்ந்து விபத்துக்களை சந்தித்து வருவதற்கு தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்துள்ளார்.

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். சிந்துரத்னா நீர்மூழ்கிக் கப்பல் மும்பை துறைமுகம் அருகே சென்றபோது திடீர் என்று கப்பலில் புகை மூண்டது. இதையடுத்து கப்பல் மும்பை கடற்கரைக்கு வந்தது. இந்த விபத்தில் கப்பலில் இருந்த 5 மாலுமிகள் மூச்சுத் திணறி சுயநினைவை இழந்தனர்.

அவர்கள் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மும்பையில் உள்ள ஐ.என்.எஸ். அஸ்வினி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அந்த கப்பலில் இருந்த 2 அதிகாரிகள் மாயமாகி உள்ளனர்.

கப்பல் இன்னும் சோதனை செய்யப்பட்டு வருவதால் அதில் ஆயுதங்கள் எதுவும் இல்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐ.என்.எஸ். சிந்துரக்ஷக் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து மும்பை துறைமுகத்தில் மூழ்கியது. இந்த விபத்தில் 18 மாலுமிகள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யத் தயாரிப்பான சிந்துரக்ஷக் கப்பலில் ஆயுதங்கள்வைக்கப்பட்டிருந்தன. அவை வெடித்துச் சிதறி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் அந்தக் கப்பலுக்குஅருகில்தான்தற்போது விபத்தில்சிக்கிய சிந்து ரத்னா கப்பலும் நிறுத்தப்பட்டிருந்தது என்பது நினைவிருக்கலாம்.

Indian Navy chief Admiral DK Joshi resigns over warship accidents

கடந்த ஆறு மாதங்களில் இரு முக்கியபோர்க் கப்பல்களில் அடுத்தடுத்து விபத்துக்கள் நடந்ததால் பெரும் சலசலப்புஏற்பட்டது. இந்த நிலையில்தான் இவற்றுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்வதாக ஜோஷி அறிவித்துள்ளா்.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளஅறிக்கையில், விபத்துக்கள் மற்றும் சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று விலகுவதாக கடற்படைத் தலைமைத் தளபதி டி.கே ஜோஷி அறிவித்துள்ளார். இந்தக்கடிதத்தை உடனடியாகமத்திய அரசுஏற்றுள்ளது. தற்காலிக தலைமைத்தளபதி பொறுப்பை வைஸ்அட்மி்ரல் ஆர்.கே.தோவனிடம் அரசு ஒப்படைக்கவுள்ளது. புதிய தலைமைத் தளபதி நியமிக்கப்படும் வரை தோவன் தலைமைத் தளபதி பொறுப்பை வகித்து வருவார் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தோணியும் விலகுவாரா...?

இதற்கிடையே, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியும் ராஜினாமா செய்யப்போவதாக செய்திகள் பரவியுள்ளன.

English summary
Navy chief Admiral DK Joshi on Wednesday resigned after two officers were feared killed and seven sailors injured when a fire erupted on board a submarine, INS Sindhuratna, around 40 nautical miles off Mumbai. "Taking moral responsibility for the accidents and incidents which have taken place during the past few months, the Navy chief has resigned. The government has accepted the resignation of Admiral Joshi with immediate effect. Navy vice-chief Vice Admiral RK Dhowan will be discharging the duties of officiating Navy chief, pending the appointment of a regular chief," said a defence ministry statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X