புதிய ஜியோ 4ஜி போன்.. இதுதாங்க இதோட சிறப்பம்சங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ரிலையன்ஸ் நிறுவனத்தின் அடுத்த அதிரயாக ரூ.0 விலையில் 4ஜி மொபைல் போன்கள் வழங்கப்படவுள்ளன.

ஜியோ 4ஜி மொபைல் போன் ரூ.0 விலையில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், இதனை வாங்க 1,500 ரூபாயை வைப்பு தொகையாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகை 3 ஆண்டுகளில் திரும்பத் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜியோ 4ஜி மொபைல் போன் இலவசமாக கிடைக்க உள்ளது.

 செப்டம்பரில் விற்பனை

செப்டம்பரில் விற்பனை

இலவச ஜியோ 4ஜி மொபைலுக்கான புக்கிங் வரும் ஆகஸ்ட் 24 முதல் தொடங்க உள்ளது. செப்டம்பர் மாதம் முதல் இது விற்பனைக்கு வரலாம் என தெரிகிறது.

 ஜியோ கீபோடு

ஜியோ கீபோடு

இந்நிலையில் இந்த ஜீரோ காஸ்ட் போனில் உள்ள அம்சங்கள் என்னென்ன என்பது குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது மற்ற பேசிக் மாடல் மொபைல்களில் இருப்பது போன்ற ஆங்கில எழுத்துக்கள் மற்றும் நம்பர்களுடன் கூடிய கீபேடை கொண்டுள்ளது இந்த ஜியோ போன்.

 எஃப்எம், டார்ச் லைட்

எஃப்எம், டார்ச் லைட்

2.4 இஞ்ச் க்யூவிஜிஏ டிஸ்பிளே மற்றும் எஃப்எம் ரேடியோவை இந்த போன்கள் கொண்டுள்ளன. மேலும் டார்ச் லைட் வசதியும் இந்த போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மெமரி கார்டு ஸ்லாட்

மெமரி கார்டு ஸ்லாட்

ஹெட்ஃபோன் ஜாக் வழங்கப்படும் என்றும் மெமரி கார்டு போடுவதற்கான ஸ்லாட் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேட்டரி மற்றும் சார்ஜரும் போனுடன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Reliance Jio offers! Free Jio Phone, Unlimited 4G Data-Oneindia Tamil
 ஜியோ செயலிகள்

ஜியோ செயலிகள்

நான்கு வழி நேவிகேஷன் சிஸ்டம் மற்றும் மற்ற போன்களில் உள்ளதை போன்ற போன் காண்டாக்ட்ஸும் இந்த போனில் இடம்பெற்றுள்ளது. கால் ஹிஸ்டரி மற்றும் ஜியோ போனின் செயலிகளும் இந்த மொபைல் போனில் இடம்பெற்றுள்ளது.

 மைக்ரோ போன் மற்றும் ஸ்பீக்கர்

மைக்ரோ போன் மற்றும் ஸ்பீக்கர்

வழக்கமாக போன்களை போல் மைக்ரோ போன் மற்றும் ஸ்பீக்கர் இந்த போனில் பொருத்தப்பட்டுள்ளது. ஜியோ 4ஜி மொபைலில் ஜியோ தன் தனா ஆஃபர் வாயிலாக மாதம் ஒருமுறை 153 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் வாய்ஸ் கால்கள், மெசேஜ், மற்றும் டேட்டா என அனைத்தும் அன்லிமிடெட் ஆக கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது

 ரீசார்ஜ் பேக்குகள்

ரீசார்ஜ் பேக்குகள்

இதோடு, 54 மற்றும் 24 ரூபாய்க்கு இரண்டு ரீசார்ஜ் பேக்குகளையும் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி 54 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து 7 நாட்களுக்கும், 24 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து இரண்டு நாட்களுக்கும் இலவச தொலைத்தொடர்ப்பு சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Information about the features of this jio Zero cost phone. This is jio phone that has the keypad with English Alpha numeric keypad like the other basic model on mobile phones.
Please Wait while comments are loading...