• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  உதய்பூரில் இஷா அம்பானி திருமண வைபோகம்.. வாவ்வ்வ்வ்வ் ஏற்பாடுகள்.. லிஸ்ட்டை பாருங்க!

  |

  உதய்பூர்: உலகமகா பணக்கார தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமால் ஆகியோர் நடுவே நடைபெறவுள்ள திருமணத்துக்கு முந்தையதாக ஏற்பாடுகளால் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

  இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமால் ஆகியோர் நடுவே வரும் 12ஆம் தேதி மும்பையில் வெகு பிரமாண்டமான முறையில், இரு வீட்டு விருந்தினர்கள் பங்கேற்புடன், திருமணம் நடைபெற உள்ளது.

  இதையொட்டி 3 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒவ்வொரு அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டுள்ளது.

  3 லட்சம் ரூபாய் திருமண பத்திரிகை

  3 லட்சம் ரூபாய் திருமண பத்திரிகை

  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயில், திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் ஆகியவற்றில் இந்த திருமண பத்திரிக்கைகளை வைத்து முகேஷ் அம்பானி சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. திருமணத்துக்கு முன்பாக 8ம் தேதியான, இன்றும், 9ம் தேதியான நாளையும், உதய்பூர் நகரில் பிரம்மாண்டவகையில், திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் நடைபெறுகின்றன.

  விமானங்கள்

  இதற்காக உதய்பூர் நகரில் உள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல்களையும் முகேஷ் அம்பானி வாடகைக்கு எடுத்துள்ளார். உறவினர்களும், நண்பர்களும் உதய்பூர் நகர் செல்வதற்காக சுமார் 50 தனியார் விமானங்கள் மொத்தமாக குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. இன்று மதியம் முதலே சிறப்பு விருந்தினர்கள் உதய்பூர் வருகை தர தொடங்கியுள்ளனர்.

  சிறப்பு விருந்தினர்கள்

  இந்த திருமணத்தில் பங்கேற்பதற்காக இந்தியாவிலிருந்து மட்டுமில்லாது, உலகமெங்கிலுமிருந்து, அமெரிக்காவின் ஹிலாரி கிளிண்டன் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் வருகை தருகிறார்கள்.

  ஆடம்பர கார்கள்

  இவர்களை சிறப்பாக, வரவேற்று, கவனிப்பதற்காக தனியாக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. உதய்பூர் விமான நிலையத்தில் இருந்து அவர்களை அழைத்து வருவதற்காக, மெர்சிடஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி உள்ளிட்ட வெளிநாட்டு கார்கள் சுமார் 1000 வாங்கப்பட்டுள்ளன.

  சாக்ஷி வருகை

  திரைப் பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார்கள் இந்த திருமண வைபவத்தில் பங்கேற்க உள்ளனர். தோனி மனைவி சாக்ஷி, மகள் ஷிவாவுடன் இன்று மாலை உதய்பூர் வந்தடைந்தார்.

  வைபோகம்

  வைபோகம்

  அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளார். ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கலை நிகழ்வுகளை நடத்துகின்றனர். இதனால் உதய்பூர் நகரமே விழா கோலம் பூண்டுள்ளது. திருமணத்திற்கு பிறகு, இஷா தனது கணவர் ஆனந்த்துடன், மும்பை ஓர்லி பகுதியிலுள்ள ரூ.450 கோடி மதிப்புள்ள பங்களாவில் குடியேற உள்ளார். இது ஆனந்த் குடும்பத்தால், இந்த தம்பதிகளுக்காக பிரத்யேகமாக கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  India’s richest man Mukesh Ambani’s daughter Isha Ambani to walk down the aisle with fiancé Anand Piramal.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more