கொடைக்கானலில் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டம்.. என்.ஐ.ஏ அதிர்ச்சித் தகவல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கொடைக்கானல் பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட தகவலை என்.ஐ.ஏ அதிகாரிகள் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 8 பேரைக் கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி கொச்சி ஐ.என்.ஏ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

NIA submits charge sheet

இந்த வழக்கின், விசாரணை இன்று எர்ணாகுளம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள் துணைக் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில், கேரளாவில் கைதான ஐ.எஸ். ஆதரவாளர்கள் கொடைக்கானலில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும், வட்டக்கனல் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் யூதர்களைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டது தெரியவந்துள்ளது என்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
NIA has submitted additional charge sheet in Ernakulam court. In which it has revealed that ISIS had a plot to attack Kodaikanal.
Please Wait while comments are loading...