For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்களை 14 வினாடிகள் உற்றுப் பார்த்தாலே டீசிங் தான்: கேரளா அதிகாரி தடாலடி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: ஒரு பெண்ணை 14 விநாடிகள் உற்றுப் பார்த்தால் கூட தண்டனைக்குரிய குற்றம் தான் என்று கேரள கலால் வரித்துறை ஆணையர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களின் கையை பிடித்து இழுப்பது, ஆடைகளை பிடித்து இழுத்து அசிங்கமாக சைகை காட்டி பேசுவது என பெண்களை ஈவ்டீசிங் செய்வது இன்றைக்கு அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன. இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனைகள் கிடைக்கிறதா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

கொச்சியில் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கேரள கலால் வரித்துறை ஆணையர், ரிஷிராஜ் சிங் பங்கேற்று பேசினார். நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து வருவது வருத்தம் அளிக்கின்றது. பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். ஒரு பெண்ணை வெறும் 14 விநாடிகள் ஒருவர் முறைத்துப் பார்த்தாலோ அல்லது உற்று நோக்கினாலோ அவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய சட்டத்தில் இடம் இருக்கிறது என்று கூறினார்.

இப்படி ஒரு சட்டம் இருப்பதே நாட்டில் பலருக்கும் தெரியவில்லை. ஒருவர் தரக்குறைவாக பேசினாலோ அல்லது தகாத முறையில் நடந்தாலோ பெண்கள் பொறுத்துக் கொள்ளக் கூடாது. சம்பந்தப்பட்ட நபர் மீது தீவிர நடவடிக்கை எடுக்க பெண்கள் சரியான சட்ட நுணுக்கங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஆணையரின் இந்த பேச்சு ஆண்களை அச்சுறுத்தும் விதமாக இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதையடுத்து சமூகவலைத்தளங்களில் அவரிடம் சராமாரிக் கேள்விகளை தொடுத்து வருகின்றனர். கலால் வரித்துறை ஆணையரின் பேச்சு கேரளாவில் தற்போது விவாதப் பொருளாகியிருக்கிறது.

கண்ணாடி போட்டா எப்படி கண்டுபிடிப்பது?

''ஒரு பெண்ணை 13 விநாடிகள் மட்டும் பார்த்து விட்டு முகத்தை திருப்பிக் கொள்கிறோம். பின்னர் மீண்டும் 13 விநாடிகள் பார்க்கிறோம். அப்போ சட்டம் என்ன சொல்லுது' எனவும், 'ஆண்கள் கண்ணாடி அணிந்திருந்தால் எப்படி கண்டுபிடிக்க முடியும்'' என்றும் அவரிடம் கேள்வி கேட்டுள்ளனர்.

அடுத்த முறை ஒரு பெண்ணிடம் பேசும்போது டைமர் வைத்துக் கொண்டு பேசுகிறேன். இல்லையென்றால், எனக்கு சிக்கல்கள் வரும்'' என இன்னொருவர் பதிவிட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் ஜெயராஜனும் பங்கேற்றார். ''இப்படி ஒரு சட்டமே இல்லை. கலால் வரித்துறை ஆணையர் சட்டத்தில் இல்லாத ஒன்றை பேசி உள்ளார் என ஆணையருக்கு எதிரான கருத்தை முன் வைத்துள்ளார்.

அப்போ கண்ணாலே பேசி சைட் அடித்தாலே இனி போலீஸ் கஸ்டடிதானோ?...

English summary
Senior Kerala IPS officer Rishi Raj Singh has created a furore with his comment that if a man stares annoyingly at a woman for 14 seconds he can be charged with harassment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X