ஏகே 47 துப்பாக்கியுடன் ராணுவ வீரர் மாயம்... எல்லையில் பரபரப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர் : இந்திய ராணுவத்தின் தரைப்படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் வியாழன் அதிகாலை நேரத்தில் மாயமாகியுள்ளார்.

பாராமுல்லாவின் கண்ட்முல்லா ராணுவ முகாமைச் சேர்ந்த வீரர் ஜாகூர் தாக்கூர் பணியின் போது காணாமல்போயுள்ளார். ஏ.கே. 47 ரக துப்பாக்கியுடன் காணாமல் போன அவரை தேடும்பணியில் சிறப்பு குழுவினர் ஈடுபட்டு வருகிறனர். உளவுத்துறையின் உதவியுடன் அவரை தேடும்பணி நடந்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் வீரர்கள் காணாமல் போவது கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நடந்தது. அப்படி காணாமல் போகும் வீரர்களை தீவிரவதிகள் அல்லது பாகிஸ்தான் ராணுவத்தினர் கடத்திச் செல்வது வழக்கமாக உள்ளது. கடத்திச் செல்லப்படும் வீரர்களின் தலை துண்டிக்கப்பட்டு மீண்டும் எல்லைப்பகுதியில் உடலை வீசி அதிர்ச்சியை ஏற்படுத்தியதும் நடந்துள்ளது.

இந்த நிலையில் வீரர் ஜாகூர் தாக்கூர் காணாமல் போயிருப்பது குறித்து பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படையின் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்த இந்திய எல்லை படை தளபதி முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A jawan with the Territorial Army has gone missing with an AK-47 rifle in Jammu and Kashmir
Please Wait while comments are loading...