அந்தரத்தில் மோதிய ரோப்கார்கள்... ஜார்கண்டில் உயர்ந்த பலி... விபத்து குறித்து திடுக்கிடும் தகவல்கள்
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் அந்தரத்தில் இரு ரோப்கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நிகழ்ந்த நிலையில் இதுவரை 32 பேர் மீட்கப்பட்ட நிலையில் இன்னும் 15 பேர் மீட்கப்பட வேண்டியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் திரிகுட் மலை உள்ளது. இங்குள்ள பாபா பைடியநாத் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு ரோப்கார் வசதி செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 766 மீட்டர் நீளத்துக்கு, 392 மீட்டர் உயரத்தில் இந்த ரோப்கார் சேவை செயல்பட்டு வருகிறது. நாட்டின் மிக உயரமான ரோப் கார் வழித்தடமான இதில் மொத்தம் 25 ரோப்கார்கள் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு ரோப் காரில் 4 பேர் உட்கார முடியும்.

ரோப்கார் விபத்து
இந்த சேவைக்கு பக்தர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. நேற்றுமுன்தினம் வழக்கம்போல் ரோப்கார் சேவை துவங்கியது. அப்போது 2 ரோப்கார்கள் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்து காரணமாக ரோப்கார் சேவை முடங்கியது. இதனால் 12 ரோப் கார்களில் 45 பேருக்கும் அதிகமானவர்கள் சிக்கி கொண்டனர். அவர்களால் வெளியே வர முடியவில்லை.

பலி 3 ஆக அதிகரிப்பு
இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர். இதுபற்றி அறிந்தவுடன் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் விமானப்படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணியை மேற்கொண்டனர். மேலும் துரதிர்ஷ்டவசமாக ரோப் காரில் இருந்த ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்தார். இதனால் பலி 3 ஆக உயர்ந்தது.

இன்னும் 15 பேர் தவிப்பு
மொத்தம் 28 மணிநேரத்துக்கும் அதிகமாக மீட்பு பணி நடந்துள்ள நிலையில் 12 ரோப்கார்களில் தவித்த 32 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 15 பேரை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று இரவில் வெளிச்சமின்மையால் மீட்பு பணி நிறுத்தப்பட்டது. இந்த பணி இன்று துவங்கி நடைபெற உள்ளது. ரோப் காருக்குள் இருந்தவர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள், ட்ரோன்கள் மூலம் வழங்கப்பட்டதாக தேசிய பேரிடம் மேலாண்மை பிரிவு உதவி கமாண்டோ வினய் குமார் கூறினார்.

விபத்து காரணம் என்ன
இந்த விபத்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடந்து இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து நடந்தவுடன் ரோப்கார் சேவையை நடத்திய நிறுவனத்தின் மேலாளர், ஊழியர்கள் தப்பியோடிவிட்டனர். இவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications