மேற்கு வங்களத்தில் காரில் பணத்துடன் சிக்கிய 3 எம்.எல்.ஏக்கள் இடைநீக்கம். . காங்கிரஸ் அறிவிப்பு
ராஞ்சி: மேற்கு வங்காளத்தில் கட்டுக்கட்டாக பணத்துடன் சிக்கிய ஜார்க்கண்ட மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 3 பேரையும் அக்ககட்சி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மாநிலத்தின் முதல்வராக முக்தி மோச்சா கட்சியின் ஹிமந்த் சோரன் என்பவர் ஆட்சி செய்து வருகிறார்.
இந்த நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தின் ஹவுரா மாவட்டம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒரு எஸ் யு வி எனப்படும் சொகுசு காரில், கட்டுக்கட்டாக பணம் கொண்டு செல்லப்படுவதாக அந்த மாநில போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கட்டுக்கட்டாக பணம்
இந்த தகவலின் அடிப்படையில், போலீசார் குறிப்பிட்ட இடத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த ஒரு சொகுசு காரை போலீசார் வழிமறித்து சோதனையிட்டனர். இதில் அந்த காரில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் 3 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். எனினும் போலீசார் அந்த காரில் நடத்திய சோதனையில், காரின் பின்பகுதியில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அதில் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

பா.ஜனதாவின் சதி
இதையடுத்து போலீசார் ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான இர்பான் அன்சாரி, ராஜேஷ் கச்ஷப், நமன் பிக்சல் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? யாரிடம் ஒப்படைக்க கொண்டு செல்கிறீர்கள்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் காரில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே, ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாரதிய ஜனதா முயற்சிப்பதாகவும், இதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

3 எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம்
இந்தநிலையில், மேற்கு வங்காளத்தில் பணத்துடன் சிக்கிய ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இர்பான் அன்சாரி, ராஜேஷ் கச்ஷப், நமன் பிக்சல் ஆகிய 3 பேரையும் இடைநீக்கம் செய்து காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான அவினாஷ் பாண்டே கூறுகையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மேற்கண்ட 3 எம்.எல்.ஏக்களையும் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளார்' என்றார். மேலும் அவர் கூறுகையில், 'எல்லோரை பற்றிய தகவல்களும் எங்களிடம் உள்ளது. இனி வரும் நாட்களில் அது யாராக இருந்தாலும், குறிப்பாக கட்சியின் மேல் பொறுப்பில் உள்ளவர்களாயினும், அடிமட்டத்தில் இருப்பவர்களாகியினும் அவர்கள் மீது குற்றம் கண்டறியப்பட்டால் கட்சி நடவடிக்கை எடுக்கும்" என்றார்.

மராட்டியத்தை போல..
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ''ஜார்க்கண்டில் பாஜக 'ஆபரேஷன் தாமரை'யை அம்பலப்படுத்த நினைக்கிறது". மராட்டியத்தில் அமைத்தது போல், ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெறும் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா ஏற்படுத்தும் முயற்சியே இது" என தெரிவித்துள்ளார். இதேபோல் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் ஒருவரான இர்பான் அன்சாரியின் உறவினர் ஒருவர் கூறுகையில், ''வெறும் 40 அல்லது 50 லட்சத்தை வைத்து அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது. ஹவுராவில் விலை உயர்ந்த பட்டு புடவைகள் வாங்கதான் சென்றோம். அதற்காக தான் அந்த பணத்தை எடுத்து சென்றோம்" என்று கூறினார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications