செப்.28ல் காங்கிரஸில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார் .. குஜராத் அரசியலில் திருப்பம்
அஹமதாபாத் : குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி, முன்னாள் ஜேன்யு பல்லைக்கழக மாணவர் தலைவர் கன்னையா குமார் ஆகியோர் வரும் செப்டம்பர் 28ம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணைக்கிறார்கள். குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி இந்த மாற்றம் அங்கு நடந்துள்ளது.
குஜராத்தின் சுயேட்சை எம்எல்ஏ மற்றும் செல்வாக்கு மிக்க தலித் தலைவரான ஜிக்னேஷ் மேவானி, செப்டம்பர் 28 ஆம் தேதி காங்கிரஸில் சேருவதாக அறிவித்துள்ளார். இதேபோல முன்னாள் ஜேன்யு பல்லைக்கழக மாணவர் தலைவர் கன்னையா குமாரும் காங்கிரஸ் கட்சியில் சேருகிறார்.
தலித் தலைவரான ஜிக்னேஷ் மேவானி 2017 ல் குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள வட்கம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸின் ஆதரவுடன் வெற்றி பெற்றார். அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது "செப்டம்பர் 28 ஆம் தேதி, நான் இந்திய தேசிய காங்கிரசில் கன்ஹையா குமாருடன் சேரப் போகிறேன்," என்று அவர் பிடிஐயிடம் கூறினார், அதன் பிறகு தான் முடிவைப் பற்றி விரிவாகப் பேச முடியும் என்றார்.

இளம் தலைவர்கள்
மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராகப் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து பிரச்சாரங்களையும், போராட்டங்களை அறிவிக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியிலிருந்து சமீபத்தில் இளம் தலைவர்கள் ஜிதன்பிரசாதா, பிரியங்கா சதுர்வேதி, சுஷ்மிதா தேவ் போன்றோர் வெளியேறிவிட்டார்கள்.

ராகுல் விருப்பம்
இதனால், பிரச்சாரத்துக்கு வலுவான இளம் தலைவர்கள், இளைஞர்களை ஈர்க்கும் வகையில் பேசக்கூடியவர்கள் தேவை என்பதால், கன்னையா குமாருக்கு முக்கியத்துவம் வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல் கட்சியில் இளம் தலைவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அதிகமான முக்கியத்துவம் வழங்க ராகுல் காந்தி விரும்புவதாக கூறப்படுகிறது அதன் காரணமாகவே ஜிக்னேஷ் மேவானி கன்னையா குமார் இணைகிறார்க்ள.

ஜிக்னேஷ் மேவானி
குஜராத் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெ உள்ளது. கடந்த முறை கடும் போட்டி கொடுத்த காங்கிரஸ் இந்த முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று போராடி வருகிறது. எனவே அதற்கு முன்னோட்டமாகத்தான் ஜிக்னேஷ் மேவானி கன்னையா குமார் இணைவு உள்ளதாக கூறப்படுகிறது.

28ம் தேதி
குஜராத் காங்கிரஸின் செயல் தலைவர் ஹர்திக் படேலும் டெல்லியில் 28ம் தேதி நடைபெறும் இணைப்பு விழாவில் கலந்து கொள்வார் என்றும் ராகுல் காந்தி முன்னிலையில் கட்சியில் ஜிக்னேஷ் மேவானி கன்னையா குமார் சேருவார்கள் என்றும் கூறப்படுகிறது.

காங்கிரஸ் வரவேற்பு
"நாட்டின் வளர்ச்சிக்காகவும், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும் மகாத்மா காந்தி, சர்தார் பட்டேல் மற்றும் ஜவஹர்லால் நேருவின் கொள்கைகளை வலுப்படுத்த விரும்பும் அனைத்து புரட்சிகர இளைஞர்களையும் நாங்கள் வரவேற்கிறோம்" என்று குஜராத் காங்கிரஸின் செயல் தலைவர் ஹர்திக் பட்டேல் வரவேற்றுள்ளார்.

மேவானிக்கு வரவேற்பு
குஜராத் காங்கிரஸின் தலைமை செய்தித் தொடர்பாளர் மணீஷ் தோஷி, 2017 தேர்தலில் காங்கிரஸ் கட்சியினரின் ஆதரவுடன் மேவானி எம்எல்ஏ ஆனார். அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்வது "பாஜகவின் ஊழல் கொள்கைகளுக்கு எதிரான கட்சியின் போராட்டத்தை வலுப்படுத்தும்" என்றார். பாஜகவின் ஊழல் கொள்கைகளுக்கு எதிராக போராடும் அனைவரையும் காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது என்றார்.
-
சீட் நம்பரை குறைக்கும் திமுக.. ஏன் அதிக தொகுதிகள் வேண்டும்? அழுத்தமாக பேசிய கே.பாலகிருஷ்ணன்! -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்?












Click it and Unblock the Notifications