For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடக அமைச்சர் மொபைல் போனில் பார்த்தது ட்ரம்ப் மனைவி மெலினாவின் "ஆ" படம்தானாம்!

அரசு விழாவில் டொனால்ட் ட்ரம்ப் மனைவியான மெலினா ட்ரம்ப்பின் நிர்வாணப் படத்தை பார்த்த கர்நாடக கல்வி அமைச்சருக்கு சிக்கல் உருவாகியுள்ளது.

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக அரசின் சார்பில் திப்பு ஜெயந்தி விழா நடந்து கொண்டிருந்த போது, கர்நாடக கல்வி அமைச்சர் தன்வீர் சேட், அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் மனைவியான மெலினா ட்ரம்பின் நிர்வாணப் படத்தை செல்போனில் பார்த்துக் கொண்டிந்தது தெரிய வந்துள்ளது.

கர்நாடக அரசு சார்பில் திப்பு ஜெயந்தி விழா அண்மையில் நடைப்பெற்றது. இந்த நிகழ்வின் போது, அம்மாநில கல்வி அமைச்சர் தன்வீர் சேட் மொபைல் போனில் நிர்வாணப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சியான பாஜக கோரிக்கை வைத்து வருகிறது.

Karnataka minister viewing Melania Trump

இந்நிலையில், கல்வி அமைச்சர் தன்வீர் சேட் மொபைல் போனில் பார்த்த ஆபாச படம் குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டது. அப்போது, கல்வி அமைச்சர் பார்த்தப்படம் டொனால்ட் ட்ரம்ப் மனைவியான மெலினா ட்ரம்பின் நிர்வாணப்படம் என்பது தெரிய வந்துள்ளது. இந்தப் படம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் மெலினா ட்ரம்ப் மாடலிங் தொழிலில் இருந்த போது எடுக்கப்பட்டது.

இந்தப் படம் மட்டும் இல்லாமல் இதுபோன்று மெலினா ட்ரம்ப்பின் பல படங்கள் அமைச்சர்களுக்குள் பரிமாறிக் கொண்டதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அரசு விழாவில் அமைச்சர் ஒருவர் ஆபாச படம் பார்த்ததை எதிர்க்கட்சிகள் கண்டித்து வரும் அதே வேளையில், அம்மாநில முதல்வர் சித்தராமையா, சட்டப்பேரவையில் ஆபாசப்படம் பார்ப்பதற்கும், வெளியில் நடக்கும் விழாவில் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இரண்டும் ஒன்றல்ல என்று கூறியிருக்கிறார். என்றாலும் அரசு விழாவின் போது அமைச்சர் தன்வீர் சேட்டு செய்த செயலை தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், இந்த சம்பவம் குறித்த அறிக்கையை கேட்டு இருக்கிறேன் என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அமைச்சர் தன்வீர் சேட், தான் எந்த தவறையும் செய்யவில்லை என்பதால் பதவியில் இருந்து விலக போவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

English summary
Karnataka Education Minister Tanveer Sait was allegedly surfing on his mobile during a government function.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X