For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குப், குப்பென்று சிகரெட் ஊதித்தள்ளும் பெங்களூர் ஐடி ஊழியர்கள்.. கட்டுப்படுத்த அரசு சுற்றரிக்கை

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில், சிகரெட் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பெங்களூரிலுள்ள ஐடி, பிடி நிறுவனங்களுக்கு மாநில அரசு சுற்றரிக்கை அனுப்பியுள்ளது.

பெங்களூர் நகரில், 2000த்துக்கும் மேற்பட்ட ஐடி, பிடி (உயிரி தொழில்நுட்ப) நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் நாஸ்காம் உள்ளிட்ட அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ளன.

Karnataka state government asks Bangalore IT companies to curtail smoking in offices

இந்த அமைப்புகளுக்கு கர்நாடக அரசின் ஐடி துறை செயலாளர் மஞ்சுளா அனுப்பியுள்ள சுற்றரிக்கையில், ஐடி, பிடி நிறுவனங்களில் புகைப்பிடித்தலை குறைக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் சுகாதாரத்துறை ஆய்வுப்படி, கர்நாடக மாநிலத்தில் 28 சதவீத மக்கள், நேரடியாக, சிகரெட் புகையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

English summary
There are more than 2000 IT, BT and ITeS companies in Bengaluru and now the State IT, BT and S&T department wants these companies to curtail smoking.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X