For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓராயிரம் நன்னி தமிழ் மக்களே.. பாசமழை பொழியும் மலையாளிகள்.. கலங்க வைக்கும் வீடியோ

கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வரும் தமிழக மக்களை பாராட்டி மலையாளிகள் வீடியோக்கள் வெளியிட்டுள்ளனர்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வரும் தமிழக மக்களை பாராட்டி மலையாளிகள் வீடியோக்கள் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோக்கள் வைரலாகி உள்ளது.

கேரளாவில் கடந்த மூன்று வாரமாக பெரிய அளவில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு ஒருவாரமாக பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

14 மாவட்டங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது. பல பகுதிகளில் இருந்து அங்கு உதவிப் பொருட்கள் குவிந்து வருகிறது.

உதவி செய்யும்

உதவி செய்யும்

கேரளா வெள்ளத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து தொடர்ந்து உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. முதலில் பெரிய அளவில் இந்த விஷயம் தமிழ்நாட்டில் பேசப்படாமல் இருந்தாலும், தற்போது தமிழகம் முழுக்க மக்கள் இதற்காக களமிறங்கி உதவி வருகிறார்கள். இங்கிருந்து நிறைய உதவி பொருட்கள் வழங்கி வருகிறார்கள்.

வீடியோ வெளியிட்டுள்ளார்

இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த நபர் ஒருவர் கோயம்புத்தூரில் இருந்து கேரளாவிற்கு செல்ல காத்திருக்கும் லாரியை வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார். ஓராயிரம் நன்னி தமிழ் மக்களே என்று இவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவில், 10 லாரியில் உதவிகள் வந்து குவிந்துள்ளது என்று மெய் சிலிர்த்து போய் பாராட்டி உள்ளார்.

வைரலாகி உள்ளது

வைரலாகி உள்ளது

இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. என்ன வேறுபாடு இருந்தாலும், தமிழக அரசு எப்படி நடந்து கொண்டாலும் தமிழக மக்கள் நமக்காக உதவுகிறார்கள் என்று இவர் சந்தோசமாக வீடியோ வெளியிட்டு கலங்கி உள்ளார். தமிழர்கள், மலையாளிகள் என்று பலர் இதில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மாற்றம்

மாற்றம்

இரண்டு நாள் முன்பு ஏற்பட்ட முல்லைப்பெரியாறு பிரச்சனை காரணமாக, மலையாளிகள் சிலர் தமிழர்கள் மீது கோபத்தில் இருந்தனர். இப்போது அந்த பிரச்சனைகளை மறந்து இரண்டு மாநில மக்களும் ஒன்று கூடி உள்ளனர். தண்ணீர் பிரித்த உறவை தண்ணீரே சேர்த்து வைத்துள்ளது.

English summary
Kerala Floods: A Mallu's emotional video thanking Tamilians for their help.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X