For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முல்லைப் பெரியாறு அணை- தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளைக் கைது செய்த கேரள போலீஸ்!

Google Oneindia Tamil News

தேக்கடி: மது பாட்டில்களுடன் வந்ததாகக் கூறி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஐந்து பேரை கேரள போலீஸார் அடாவடியாக கைது செய்து சில மணி நேரங்களுக்குப் பிறகு விடுவித்துள்ளனர்.

கேரளாக்காரர்களின் அட்டகாசத்திற்கும், அநியாயத்திற்கும் அளவே இல்லை. குறிப்பாக முல்லைப் பெரியாறு அணை பொறுப்பில் உள்ள தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளை அவர்கள் ரொம்பவே அவமானப்படுத்தும் வகையில் நடத்துவது வழக்கம். இதை உறுதியுடன் எதிர்க்க இதுவரை தமிழக அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இதனால் தமிழக அதிகாரிகள், கேரளத்தினரிடம் தொடர்ந்து அவமரியாதைகளைச் சந்தித்து வருகின்றனர்.

Kerala police arrests 5 PWD staffs in Mullai periyar dam

முல்லைப் பெரியாறு அணை பகுதி மற்றும் தேக்கடியில் அதேபோல், பொதுப்பணித் துறை உதவி செயற் பொறியாளர் அலுவலகம், பொறியாளர்கள் குடியிருப்பு, ஆய்வு மாளிகை, தமிழக மின்வாரிய பொறியாளர்கள், ஊழியர்கள் குடியிருப்புகளும் உள்ளன. இவை அனைத்தும் கேரள மாநிலத்தில் இருந்தாலும் தமிழக பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளன.

முல்லைப் பெரியாறு அணைக்கு திங்கள்கிழமை மாலை வழக்கமான பணிகளை மேற்கொள்வதற்கும், மாத சம்பளத்தை ஊழியர்களுக்கு வழங்குவதற்காகவும் அணையின் உதவி செயற்பொறியாளர் கல்யாணசுந்தரம், உதவி பொறியாளர்கள் வீரக்குமார், ரமேஷ், பொதுப்பணித்துறை ஊழியர் மணி, படகு டிரைவர் முருகன் ஆகியோர் தேக்கடி படகு தளத்திலிருந்து அணைக்கு செல்வதற்கு வந்தனர்.

அப்போது, படகுத் தளத்திலிருந்த கேரள போலீஸார் 5 பேரின் அடையாள அட்டையை காட்ட வேண்டும் என்றும், பதிவேட்டில் கையெழுத்து இட வேண்டும் என்று தெரிவித்தார்களாம்.

தமிழக அதிகாரி கல்யாணசுந்தரம் அணை எங்களது கட்டுப்பாட்டில் உள்ளது. அணைக்கு செல்வதற்கு யாரிடமும் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்ததால், இரண்டு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், அனுமதி இல்லாமல் 4 மது பாட்டில்கள் வைத்திருப்பதாகவும், தமிழக அதிகாரி உள்பட 5 பேரை கைது செய்வதாக கூறி கேரள போலீஸார், தமிழக அதிகாரிகளை படகு தளத்தில் நிறுத்தி வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தமிழக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கேரள போலீஸாரும் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் பின்னர் 3 மணி நேரத்திற்கு பிறகு கேரள போலீஸார் கட்டுப்பாட்டில் இருந்த தமிழக அதிகாரி மற்றும் ஊழியர்களை விடுவிக்கப்பட்டனர்.

English summary
Kerala police arrested 5 PWD staffs in Mullai periyar dam and later released them, for no reason.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X