செல்போனில் அடுத்தவர் மனைவிக்கு பாலியல் தொல்லை.. கேரள எம்எல்ஏ மீது வழக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோவளம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வின்சென்ட் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் நெய்யாத்தின்கரா பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் தூக்கமாத்திரை அதிக அளவில் தின்று மயங்கிய நிலையில் 51 வயது பெண் ஒரு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். சிகிச்சையில் இருக்கும் அந்தப் பெண்ணின் கணவர் கூறுகையில் , 'எனது மனைவிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ வின்சென்ட் செல்போன் மூலம் தொடர்ந்து பேசி பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் தனது மனைவி தற்கொலைக்கு முயன்றார்' என்று தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக போலீசில் புகார் செய்திருந்தார்.

Kerala: Rape case registered against Congress MLA

இது தொடர்பாக நேற்று கேரள காவல்துறை வெளியிட்ட ஒரு அறிக்கையில், " இந்த குற்றச்சாட்டு, தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணிடம் பலராமபுரம் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றார். இதனைத் தொடர்ந்து வின்சென்ட் மீது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க நெய்யாற்றின்கரை டிஎஸ்பி ஹரிகுமாரை, அம்மாநில காவல்துறை நியமித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ வின்சன்ட் கூறுகையில்," இது ஆதாரமற்ற குற்றசாட்டு. விசாரணையை சந்திக்க தயாராக உள்ளேன். இதில் அரசியல் சதி உள்ளது" என்று கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A Congress MLA was booked on the charge of rape on the basis of a statement given by a 51-year-old woman, who was allegedly harassed by him.
Please Wait while comments are loading...