For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி பலி.. 30 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் சோகம்

Google Oneindia Tamil News

காசர்கோடு: கேரளா மாநிலம் காசர்கோடில் ஷவர்மா சாப்பிட்ட 16 வயது பள்ளி மாணவி பலியாகிவிட்டார். அவருடன் ஷவர்மா சாப்பிட்ட 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

Recommended Video

    கெட்டுப்போன Shawarma உயிரைக்கொல்வது எப்படி? | Shawarma Food Poisoning | Oneindia Tamil

    அந்த காலத்தில் எல்லாம் பள்ளி, கல்லூரி முடித்து வீட்டுக்கு வரும் மாணவர்கள், ஆபீஸ் முடித்து வருவோர் உள்ளிட்டோருக்கு வீட்டிலேயே திண்பண்டங்கள் தயார் செய்து கொடுத்து வந்ததை நாம் அறியும்.

    ஈவனிங் ஸ்னாக்ஸ் என்ற பெயரில் ஏதேனும் ஒரு நொறுக்கு தீனி அதுவும் சுத்தமாக வீட்டில் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் காலம் செல்ல செல்ல ஸ்னாக்ஸ் விற்கும் கடைகள் ஒரு தெருவுக்கு 10 கடைகளாவது முளைத்து வருகின்றன.

    நடிகையை கடத்தி “அந்த” வீடியோ..ஹேக்கர்களுடன் நடிகருக்கு தொடர்பு? கைதாகிறாரா காவ்யா மாதவன்? பரபர கேரளாநடிகையை கடத்தி “அந்த” வீடியோ..ஹேக்கர்களுடன் நடிகருக்கு தொடர்பு? கைதாகிறாரா காவ்யா மாதவன்? பரபர கேரளா

     பானிப்பூரி

    பானிப்பூரி

    பானிப்பூரி, மசாலா பூரி, காளான், வடை, பஜ்ஜி, போண்டா, சமோசா, பிரென்ச் பிரைஸ், பீட்சா, பர்கர், ஹேம்பர்கர், சாண்ட்விச், ஷவர்மா, பாஸ்தா, சூப் வகைகள் உள்ளிட்ட உணவுகளை விற்பனை செய்யும் கடைகள் பெரும்பாலான இடங்களில் வந்துள்ளன. பள்ளி முடித்துவிட்டு வீடு திரும்பும் போது இவற்றை நாள்தோறும் வாங்கி உட்கொள்கிறார்கள்.

     உணவுகள்

    உணவுகள்


    இது போன்ற உணவுகளால் உடல் எடை கூடும் ஒபேசிட்டி வருகிறது என மருத்துவர்கள் அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறார்கள். ஆனால் யாரும் கேட்பதில்லை. இந்த நிலையில் கேரளாவில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. கேரளாவில் காசர்கோட்டில் ஒரு ஸ்னாக்ஸ் கடையில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்துவிட்டார்.

    ஒரே பெண் குழந்தை

    ஒரே பெண் குழந்தை

    கரிவெல்லூர் பகுதியில் ஈவி பிரசன்னாவின் ஒரே பெண் குழந்தை தேவானந்தா (16) ஆவார். இவரது தந்தை நாராயணன் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து தாய் பிரசன்னாவுடன் தேவானந்தா தனது பெரியம்மா வீட்டில் தங்கியிருந்தனர்.

    தேவானந்தா

    தேவானந்தா

    தற்போது கரிவெல்லூரில் அரசு பள்ளியில் தேவானந்தா 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பள்ளிக்கு அருகே உள்ள ஒரு கடையில் மாலை நேரங்களில் ஸ்னாக்ஸ் சாப்பிடுவது வழக்கம். அது போல் நேற்றைய தினமும் தேவானந்தா உள்பட பள்ளி மாணவ, மாணவிகள் புட் பாயிண்ட் எனும் கடையில் ஷவர்மாவை சாப்பிட்டனர்.

     வாந்தி மயக்கம்

    வாந்தி மயக்கம்

    இதை சாப்பிட்ட கொஞ்ச நேரத்திற்கெல்லாம் மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இங்கு தேவானந்தா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 30 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் 10 முதல் 15 வயதுடைய மாணவர்களாவர்.

    English summary
    kerala School girl dies afer she had rotten shawarma in a snacks shop. 30 more admitted in hospital.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X