பெற்றோருக்கே தெரியாமல்.. 11 வருடங்களாக ஒரே வீட்டில் காதலியுடன் வாழ்ந்த இளைஞர்.. ஆச்சர்யம்!
கொச்சி: கேரளாவின் பாலக்காடு அருகே பெற்றோருக்கே தெரியாமல் ஒரே வீட்டில் காதலியுடன் 11 ஆண்டுகள் இளைஞர் குடும்பம் நடத்தி இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உளள்து. 11 ஆண்டுகளாக மாட்டாத இந்த காதல் ஜோடி, வீட்டில் வரண் பார்க்க தொடங்கியதால் 3 மாதங்களுக்கு பிறகு வீட்டை விட்டு வெளியேறிய பின்னரே சிக்கி உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
Recommended Video
கேரளாவின் பாலக்காடு மாவட்டம் அயலூர் பகுதியைச் சேர்ந்த வேலாயுதன் என்பவரது மகள் சஜிதா கடந்த 2010-ம் ஆண்டு காணாமல் போனார். இதுபற்றி போலீசில் அவரது குடும்பத்தினர் புகார் கொடுத்தனர். ஆனால் சஜிதாவை கண்டுபிடிக்க போலீசாரால் அப்போது முடியவில்லை.
இதனிடையே வீட்டை விட்டு வெளியேறிய சஜிதா, தனது வீட்டில் இருந்து வெறும் 500 மீட்டர் தூரம் தள்ளி உள்ள தனது காதலன் ரஹ்மான் (34) வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தன் காதலியுடன் வாழ்வதற்காக ரஹ்மான் செய்த வேலை தான் யாரும் செய்யாத தில்லாங்கடி ரகம்..

காதலியுடன் வாழ்க்கை
குடும்பத்தினருக்கு தெரியாத வகையில் வீட்டில் தன்னுடைய அறை யில் காதலியோடு வாழ முடிவு செய்திருக்கிறார். ஏனெனில் இருவரும் வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள். பெற்றோர்கள் ஏற்க மாட்டார்கள் என்று நினைத்து அந்த முடிவை செய்திருக்கிறார்.

பூட்டிற்கு எர்த்
தனது காதலி சஜிதாவை தனது அறையில் தங்க வைத்த ரஹ்மான், தனது அறைக்குள் தன்னை தவிர யாரும் வராத அளவிற்கு ஏற்பாடுகளை செய்திருக்கிறார். தனது குடும்பத்தினருடன் சாப்பிடாமல், காதலியுடன் சேர்ந்து சாப்பிட்டிருக்கிறார். தனக்கு அளிக்கும் உணவையே காதலிக்கும் கொடுத்திருக்கிறார். தான் இல்லாத சமயத்தில் தன்னை தவிர வேறு யாரும் கதவை தொட முடியாத வகையில் எர்த் பூட்டை மாட்டி உள்ளார். இதனால் யாரும் தொடுவது கிடையாது.

அதிசயம்
வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால் வீட்டின் ஜன்னல் கம்பி வழியாக வரும் வகையில் ஜன்னல் கம்பிகளை கழட்டி மாட்டும் வகையில் வடிமைத்திருக்கிறார். இதன்படியே இருவரும் வீட்டை விட்டு வெளியில் சென்று வந்துள்ளார்கள். இப்படியே இவர்கள் 11 ஆண்டுகள் குடும்பம் நடத்தி வந்துள்ளார்கள்.

பார்த்த சகோதரி
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஹ்மானுக்கு வரண் தேடி உள்ளார்கள். இதனால் தனது காதலியை அழைத்துக் கொண்டு வேறு வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு குடும்பம் நடத்தி வாழ்ந்து வந்த ரஹ்மானை அவரது சகோதரி பார்த்துள்ளார். இதையடுத்து போலீசில் அளிக்கப்பட்ட புகாரை ஏற்று நென்மாரா போலீசார் விசாரித்துள்ளார்கள். பின்னர் ரஹ்மானையும், அவரோடு வாழ்ந்து வந்த சஜிதாவையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போதுதான் இருவரும் 11 ஆண்டுகள் ஒரே வீட்டில் வசித்து வந்தது தெரியவந்தது. சஜிதாவும் அவரோடு வாழ விரும்பியதால் தம்பதியை சேர்ந்து வாழச் சொல்லி நீதிமன்றம் அனுப்பி வைத்திருக்கிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications