For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

10 வருடம் முன் மங்களூரில் நடந்த அதே விமான விபத்து.. கொஞ்சமும் மாறாமல் கோழிக்கோட்டில்.. ஒரே காரணம்!

Google Oneindia Tamil News

கோழிக்கோடு: கோழிக்கோடு விமான நிலையத்தில் இன்று ஏற்பட்ட விமான விபத்து போலவே 10 வருடங்களுக்கு முன் கர்நாடகா மாநிலம் மங்களூர் விமான நிலையத்திலும் விமான விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    Kerala விமான விபத்து | 10 வருடம் முன் மங்களூரில் நடந்த அதே சம்பவம் | Oneindia Tamil

    துபாயில் இருந்து கேரளா நோக்கி வந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று மாலை விபத்துக்கு உள்ளானது. 181 பேர் சென்ற விமானம் மாலை 7.30 மணிக்கு விபத்து உள்ளது.

    இதுவரை இரண்டு விமானிகள் உட்பட 15 பேர் இந்த விமான விபத்தில் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் இந்த விமான விபத்தில் பலியாகி இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

    மங்களூர் விமான நிலையம்

    மங்களூர் விமான நிலையம்

    கோழிக்கோடு விமான நிலையத்தில் இன்று ஏற்பட்ட விமான விபத்து போலவே 10 வருடங்களுக்கு முன் கர்நாடகா மயிலம் மங்களூர் விமான நிலையத்திலும் விமான விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 2010 மே 22ம் தேதி மங்களூரில் இந்த விமான விபத்து ஏற்பட்டது. ஏர் இந்தியாவிற்கு சொந்தமான போயிங் 737-800 விமானம் ஆகும் இது. துபாயில் இருந்து மங்களூர் வந்த விமானம் விபத்துக்கு உள்ளானது.

    விழுந்து நொறுங்கியது

    விழுந்து நொறுங்கியது

    இந்த விமானமும் கோழிக்கோடு விமான விபத்து போலவே ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விமானம் தரையிறக்கும் முன் மூன்று முறை அதை இறக்க முயன்று இருக்கிறார்கள். ஆனால் மூன்று முறையும் விமானியால் மங்களூர் விமான நிலையத்தில் விமானத்தை இறக்க முடியவில்லை. கடைசி முறை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி கோரிக்கையை மீறி விமானத்தை இறக்கி உள்ளனர்.

    ஓடுதளத்தை தாண்டி ஓடியது

    ஓடுதளத்தை தாண்டி ஓடியது

    அப்போது விமானத்தை கீழே இறக்க முடியாமல் விமானம் ஓடுதளத்தை தாண்டி வெளியே சென்று விபத்து உள்ளாகி உள்ளது. மலையில் இருந்து கீழே விழுந்து விமானம் விபத்து உள்ளாகி உள்ளது . இதில் மொத்தம் 158 பேர் பலியானார்கள் . 2400 மீட்டர் தூரம் மட்டுமே கொண்டது அந்த ஓடுபாதை. இதில் 2000 மீட்டர் நீளத்தில் இறங்கி, விமானத்தி நிறுத்த முடியாமல், விமானம் கீழே விழுந்து நொறுங்கி உள்ளது.

    அதே மாதிரி

    அதே மாதிரி

    இந்த விமான நிலையம் கர்நாடகாவில் உள்ள Tabletop runway கொண்ட விமானம் நிலையம் இது ஆகும். டேபிள் டாப் ரன்வே என்பது மலை மீது அமைக்கப்பட்டு இருக்கும் , அல்லது உயரமான இடத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் ஓடுபாதை கொண்ட விமான நிலையம் ஆகும். உயரமான குன்று மீது விமான நிலையம் இருப்பதால், இங்கு விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

    கேரளா அதேபோல்

    கேரளா அதேபோல்

    கேரளாவிலும் அதேபோல் கோழிக்கோடு டேபிள்டாப் ரன்வே கொண்டது ஆகும். கேரளாவில் இருக்கும் ஒரே டேபிள் டாப் ரன்வே விமான நிலையம் கோழிக்கோடுதான். இந்த விமான நிலையத்தின் டேபிள் டாப் ரன்வே நீளம் வெறும் 2850 மீட்டர்தான். பொதுவாக 3150 கிலோ மீட்டர் தூரத்திற்கு குறைவாக இருந்தால் அந்த விமான ஓடுபதையில் விமானத்தை இறக்குவது மிகவும் கடினம். இந்த இரண்டு விபத்துக்கு இதுதான் முக்கிய காரணம் ஆகும்.

    English summary
    Kozhikode Air India flight accident: Mangalore faced the same like accident 10 years back due to Table Top.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X