For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாட்டுத்தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி - ராஞ்சி சிபிஐ கோர்ட் அதிரடி

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் இருந்து லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என்றுராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ராஞ்சி: மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் இருந்து லாலுபிரசாத் யாதவ் குற்றவாளி என்று ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1990ஆம் ஆண்டு பீகார் முதல்வராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தபோது மாட்டுத்தீவன ஊழலில் சிக்கினார். சுமார் 950 கோடி ரூபாய் அவர் ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.

Lalu Prasad Yadav Deoghar Case Judgment

பீகாரின் ஒரு பகுதியாக இருந்து, தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சாய்பாசா மாவட்ட கருவூலத்தில் மாட்டுத்தீவனம் தொடர்பான போலி பில்களை அளித்து ரூ.37.7 கோடி ஊழலில் ஈடுபட்டதாக லாலு பிரசாத் உள்ளிட்டவர்கள் மீது ஒரு வழக்கு பதிவானது.

பீகாரின் ஒரு பகுதியாக இருந்து, தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சாய்பாசா மாவட்ட கருவூலத்தில் மாட்டுத்தீவனம் தொடர்பான போலி பில்களை அளித்து ரூ.37.7 கோடி ஊழலில் ஈடுபட்டதாக லாலு பிரசாத் உள்ளிட்டவர்கள் மீது ஒரு வழக்கு பதிவானது.

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று பிற்பகல் தீர்ப்பளித்தது. 1991-94 வரையிலான காலகட்டத்தில் பீகார் முதல்வராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தபோது மாட்டுத்தீவனம் வாங்கியதில் பல்வேறு முறைகேடுகள் செய்து சுமார் 950 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
பீகாரின் ஒரு பகுதியாக இருந்து, தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சாய்பாசா மாவட்ட கருவூலத்தில் மாட்டுத்தீவனம் தொடர்பான போலி பில்களை அளித்து ரூ.37.7 கோடி ஊழலில் ஈடுபட்டதாக லாலு பிரசாத் பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா, ஐக்கிய ஜனதாதள எம்.பி. ஜெகதீஷ் சர்மா உள்ளிட்ட 44 பேர் மீது வழக்கு பதிவானது.

சாய்பாபா கருவூலத்திலிருந்து 78 போலி ஒதுக்கீடு கடிதங்கள் மூலம் லாலு ரூ.37.7 கோடி பணம் எடுத்தது நீரூபிக்கப்பட்டது. இதுகுறித்து ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 2013ம் ஆண்டு லாலுபிரசாத், ஜெகனாத் மிஸ்ரா உள்ளிட்டோருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும்,ரூ. 25 லட்சம் அபராதமும் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவரின் லோக்சபா உறுப்பினர் தகுதி பறிக்கப்பட்டது. தண்டனை பெற்ற லாலு சிறையிலடைக்கப்பட்டார். இதையடுத்து லாலு பிரசாத் யாதவ் 11 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, லாலு பிரசாத் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், லாலு பிரசாத்தை ஜாமீனில் விடுதலை செய்தது. மற்றொரு வழக்கான தியோஹர் மாவட்ட கருவூலத்தில் ரூ. 84.5 கோடியை எடுத்தது தொடர்பான வழக்கு ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லாலு உள்பட 34 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 11 பேர் வழக்கு விசாரணையின் போதே இறந்து விட, ஒருவர் மட்டும் அரசு தரப்பு சாட்சியாக மாறி தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

இந்தவழக்கு விசாரணையை ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி ஷிவ்பால் சிங், நீதிபதி எஸ்.எஸ். பிரசாத் நீதிபதி பிரதீப் குமார் விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் கடந்த 13ம் தேதி இறுதி வாதமானது முடிவடைந்தது. சாட்சியங்கள் அனைத்தும் விசாரிக்கப்பட்ட நிலையில், வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக லாலு மற்றும் அவரது மகன் தேஜஸ்வி ஆகியோர் நேற்றே ராஞ்சி வந்து விட்டனர்.

பீகார் மாநிலத்தில் நடைபெற்ற மாட்டு தீவன ஊழல் தொடர்பாக தற்போது வரை 50க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு நபர்கள் மீது பதியப்பட்டுள்ளது. சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஷிவ்பால் சிங் இன்று தீர்ப்பளித்துள்ளார். 1996ல் தொடங்கிய இந்த ஊழல் வழக்கின் பயணம் கடந்த 21 ஆண்டுகளாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் இருந்து லாலு உள்ளிட்ட17 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளித்த நீதிமன்றம் ஜெகன்நாத்மிஸ்ரா உள்ளிட்ட 6 பேர் விடுதலை செய்தது. தண்டனை விவரம் ஜனவரி 3ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

English summary
RJD chief Lalu Prasad Yadav has left his guest house for the special CBI court which will pronounce verdict in the Deoghar leg of the fodder scam case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X