சேர்க்கை குறைவாக உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளை மூட ஏஐசிடிஇ அதிரடி முடிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: முப்பது சதவீதத்திற்கும் கீழ் சேர்க்கை நடைபெற்றுள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் குறைவாக சேர்க்கை நடைபெற்றுள்ள கல்லூரிகளை மூட அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் முடிவு செய்துள்ளது என்று அதன் தலைவர் அனில் டி.சாஸ்ரபுத்தே தெரிவித்துள்ளார்.

Less student filling Engineering colleges will be closed soon, AICTE

அடுத்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளை மூட முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதுவும் 30 சதவீதத்திற்குக் குறைவாக மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ள என்ஜினீயரிங் மூட முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கல்லூரிகளை மூடுவதற்கான அபராத தொகை தற்போது குறைக்கப்பட்டுள்ளது என்றும் இந்தியா முழுவதும் உள்ள 10,361 என்ஜினீயரிங் கல்லூரிகளில் 27லட்சம் காலியிடங்கள் உள்ளது என்றும் சாஸ்ரபுத்தே தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
AICTE has decided to close down those engineering colleges which recorded less admissions in last five years.
Please Wait while comments are loading...