For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3 வருஷத்துல தயாரிக்க வேண்டிய கிரையோஜெனிக் என்ஜினை 20 வருஷமா தயாரிச்சது பெருமையா...?

Google Oneindia Tamil News

பெங்களூர்: 3 முதல் 5 வருடங்களில் தயாரிக்க வேண்டிய கிரையோஜெனிக் என்ஜினை உருவாக்க, நம்ம இஸ்ரோ விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட 20 வருடங்களை சாப்பிட்டுள்ளனர்.

இந்த 20 வருட கால தாமதத்தால் நமக்கு ஏற்பட்ட நேர விரயம், பண விரயம் ஆகியவற்றைக் கணக்குப் போட்டுப் பார்த்தால் இந்நேரத்திற்கு நாம் பல கிரையோஜெனிக் என்ஜின்களை உருவாக்கிக் குவித்திருக்க முடியும்.

ஆனால் இத்தனை கால தாமதத்தை வசதியாக மறைத்து விட்டு, நாம் மிகப் பெரிய சாதனை செய்து விட்டது போல காட்டிக் கொள்கிறார்கள் இஸ்ரோ குழுவினர். கிரையோஜெனிக் என்ஜின் வைத்துள்ள ஒரு சில நாடுகளில் இந்தியாவும் தற்போது இணைந்திருந்தாலும், இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்த இந்த தாமதமானது காலக் கொடுமையானது என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.

சின்ன என்ஜினுக்கே இத்தனை வருஷம்

சின்ன என்ஜினுக்கே இத்தனை வருஷம்

இத்தனைக்கும் கிரையோஜெனிக் என்ஜினின் முதல் கட்டத் தயாரிப்புக்குத்தான் இத்தனை காலத்தை எடுத்துள்ளனர் நமது இஸ்ரோ குழுவினர். அதாவது நாம் தற்போது தயாரித்துள்ளது முழுமையான கிரையோஜெனிக் என்ஜின் அல்ல.

இது முழுமையானதல்ல

இது முழுமையானதல்ல

தற்போது வெற்றிகரமாக ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி டி5 ராக்கெட்டில் பொருத்தப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் முழுமையானதல்ல. அதில் இன்னும் பல வேலைகள் பாக்கியுள்ளன. முதல் கட்டப் பணியைத்தான் நாம் முடித்து ஜிஎஸ்எல்வியில் பொருத்தி ஏவியுள்ளோம். அதற்கே 20 வருடங்களை சாப்பிட்டுள்ளோம்.

முழுமையான செயற்கைக் கோளை ஏவ

முழுமையான செயற்கைக் கோளை ஏவ

ஒரு முழுமையான, வலிமையான, அதி நவீன தகவல் தொடர்பு செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த தற்போது பொருத்தப்பட்ட கிரையோஜனிக் என்ஜினை விட மிகவும் சக்தி வாய்ந்த என்ஜின் தேவைப்படும். அதை நாம் இன்னும் உருவாக்கவில்லை.

தம்மாத்தூண்டு செயற்கைக் கோள்தான்

தம்மாத்தூண்டு செயற்கைக் கோள்தான்

தற்போது ஜிஎஸ்எல்வி டி5 மூலம் செலுத்தப்பட்ட தகவல் தொடர்பு செயற்கைக் கோளான ஜிசாட், சிறியது. அதை விட இரண்டு மடங்கு பெரிய செயற்கைக் கோளை செலுத்தினால்தான் அது முழுமையான உபயோகமாக இருக்கும். ஆனால் அதைச் செலுத்த தற்போது நாம் உருவாக்கியுள்ள கிரையோஜெனிக் என்ஜின் போதாது.

வெறும் மெம்பர்தான்

வெறும் மெம்பர்தான்

இப்போது நாம் கிரையோஜெனிக் வைத்துள்ள நாடுகள் வரிசையில் ஒரு உறுப்பினராக சேர்ந்தது என்னவோ வாஸ்தவதம்தான். ஆனால் இது ஆர்டினரி மெம்பர்ஷிப்தான்.. நவீனமான, சக்தி வாய்ந்த முழுமையான கிரையோஜெனிக் என்ஜினை நாம் வெற்றிகரமாக உருவாக்கும்போதுதான் லைப் மெம்பராக முடியும்.

நினைத்ததை சாதிக்க முடியும்

நினைத்ததை சாதிக்க முடியும்

முழுமையான கிரையோஜெனிக் என்ஜினை நாம் உருவாக்கினால்தான், நம்மால் விண்வெளியில் நினைத்ததை சாதிக்க முடியும். நினைத்த போதெல்லாம் ஏவவும் முடியும்.

வாய்ச் சவடால் இஸ்ரோ

வாய்ச் சவடால் இஸ்ரோ

கிரையோஜெனிக் என்ஜினை இந்தியா உருவாக்கப் போவதாக முன்பு இஸ்ரோ அறிவித்தபோது, 3 அல்லது 5 ஆண்டுகளில் முடித்து விடுவோம் என்று சவாலாக பேசியிருந்தது. ஆனால் அப்போதே பலரும் சொன்னார்கள், குறைந்தது 10 வருடமாவது பிடிக்கும் என்று. ஆனால் அதை இஸ்ரோ நிராகரித்தது. சொன்னபடி செய்வோம் என்றது. ஆனால் அப்படிச் செய்யாமல், தாமதம் செய்ததோடு, மேலும் 10 ஆண்டுகளைக் கூடுதலாக காலி செய்து விட்டது.

ரஷ்யா கொடுத்ததை வைத்து ஓட்டிய இஸ்ரோ

ரஷ்யா கொடுத்ததை வைத்து ஓட்டிய இஸ்ரோ

ரஷ்யாவுடன் நாம் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, நமக்கு ரஷ்யா, 7 கிரையோஜெனிக் என்ஜின்களைக் கொடுத்தது. அதில் நாம் ஆறு என்ஜின்களை ஏற்கனவே பயன்படுத்தி விட்டோம். ஒரு என்ஜினை ஆய்வுக்காக பயன்படுத்திக் கொண்டோம்.

ரஷ்ய வரைபடங்களை வைத்து கற்ற இஸ்ரோ

ரஷ்ய வரைபடங்களை வைத்து கற்ற இஸ்ரோ

ரஷ்யா நமக்கு கிரையோஜெனிக் என்ஜின்களைக் கொடுத்தபோது அதன் தொழில்நுட்பம் குறித்த வரைபடங்களையும் சேர்த்தே கொடுத்தது. அதை வைத்துத்தான் நாம் நமது கிரையோஜெனிக் என்ஜினை வடிவமைக்க பாடம் கற்றோம். அதில் பல தவறுகளைச் செய்தோம். இழப்புகளையும் சந்தித்தோம். இப்போதுதான் சின்னதாக ஒரு என்ஜினை உருவாக்கியுள்ளோம்.

ஆய்வுக்கே பல வருடம் போச்சு

ஆய்வுக்கே பல வருடம் போச்சு

நாம் கிரையோஜெனிக் என்ஜினை உருவாக்குவதற்கு எடுத்துக் கொண்ட காலத்தை விட அதற்கான ஆய்வுக்குத்தான் நிறைய செலவிட்டுள்ளோம். இதை நிச்சயம் குறைத்திருக்க வேண்டும், குறைத்திருக்கவும் முடியும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். ஆய்வுக்காக இத்தனை காலம் செலவிட்டது தேவையற்றது என்பதும் இவர்களின் கருத்தாகும்.

தனியாரையும் ஈடுபடுத்தியிருந்தால்...

தனியாரையும் ஈடுபடுத்தியிருந்தால்...

ஆய்வுக்காக இத்தனை காலத்தை எடுத்துக் கொண்டதற்குப் பதில் இந்த உருவாக்கத்தில் தனியாரையும் ஈடுபடுத்தியிருக்கலாம் என்பது பலரின் கருத்தாகும். ஆளாளுக்கு ஒரு வேலையைக் கொடுத்து காலத்தையும், செலவையும், விரயத்தையும் குறைத்திருக்க முடியும் என்றும் சொல்கிறார்கள்.

English summary
It might sound carping to suggest that our cryogenic engine success, demonstrated in the flawless launch of the Geosynchronous Satellite Launch Vehicle (GSLV)-D5, remains partial and comes too late. But that is the reality. It has taken 20 years to complete at least the first stage of the cryogenic engine programme, which was touted to get over in 3-5 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X