For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீனாவைப் போட்டி நாடாகக் கருதக் கூடாது... இந்தியாவிற்கு அமெரிக்கா 'அட்வைஸ்'

Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் எந்த நாட்டுடான உறவைத் தேர்ந்தெடுப்பது என்பதில் இந்தியாவுக்கு தயக்கம் தேவையில்லை. சீனாவை ஒரு போட்டியாளராக கருதுவதை இந்தியா தவிர்க்க வேண்டும் என இந்தியா வந்துள்ள அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் சக்ஹேகல் தெரிவித்துள்ளார்.

இருநாட்டு ராஜாங்க உறவை வலுப்படுத்தும் விதமாக இந்தியா வந்துள்ளார் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்ததைத் தொடர்ந்து சிந்தனையாளர் அமைப்பின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஜப்பானின் ஒத்துழைப்பு...

ஜப்பானின் ஒத்துழைப்பு...

இந்தியாவும், அமெரிக்காவும் தங்களது ராணுவ உறவுகளை விரிவுபடுத்த வேண்டும். ஜப்பானும் தனது பாதுகாப்பு ஒத்துழைப்பை நல்கவேண்டும்.

ஆக்கப்பூர்வமான நட்புறவு...

ஆக்கப்பூர்வமான நட்புறவு...

அமெரிக்க தனது ஆசிய கூட்டணி நாடுகளிடையே ஒரு குறிப்பிட்ட நாட்டின் உறவு மட்டும் தேவை என்று கருதவில்லை. சீனாவுடன் ஆக்கப்பூர்வமான நட்புறவை அமெரிக்கா கொண்டுள்ளது.

நெருங்கிய நட்புறவு...

நெருங்கிய நட்புறவு...

இதேபோல், அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளிடையே எந்த நாட்டுடன் நெருங்கிய நட்புறவை பேணுவது என்று இந்தியா பரிசீலிக்கத் தேவையில்லை. எங்களது உறவு இந்தியாவிடமும், சீனாவிடமும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளது.

ஆரோக்கியமான போட்டி...

ஆரோக்கியமான போட்டி...

இவ்விரு நாடுகளிடையே ஆரோக்கியமான போட்டியையே காண விரும்புகிறோம். எனவே, போட்டி பகைமையை இரு நாடுகளும் (இந்தியா, சீனா) தவிர்க்க வேண்டும். அமைதியான உலகை உருவாக்குவதற்கு அமெரிக்கா தொடர்ந்து பணியாற்றும். இதில், சீனாவும், இந்தியாவும் எங்களது நிலையைத்தான் கொண்டுள்ளன.

அமைதியான தீர்வு...

அமைதியான தீர்வு...

தென் சீனக் கடல் பகுதியில் நிலவும் சர்ச்சை (எல்லைப் பிரச்னை) தொடர்பான விஷயத்தில், அமைதியான வழியில் தீர்வு காண்பதையே இந்தியாவும், அமெரிக்காவும் ஆதரிக்கின்றன.

ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்...

ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்...

"கிழக்கை நோக்கி' என்ற கொள்கையை (ஆசிய நாடுகளுக்கான கொள்கை) இந்தியா தொடரும் நிலையில், அமெரிக்காவும், இந்தியாவும் தங்களது பாதுகாப்பு நலன்களில் ஒருங்கிணைந்து செயல்படுவது முக்கியமானதாகும்.

அமெரிக்கா உதவும்...

அமெரிக்கா உதவும்...

உலக வல்லரசு நாடாக உயரும் வகையில் இந்தியாவின் வளர்ச்சிக்கு அமெரிக்கா உதவும்.

ஐ.நா.வில் நிரந்தர உறுப்பினர்...

ஐ.நா.வில் நிரந்தர உறுப்பினர்...

ஜி20 நாடுகளின் முக்கியத்துவத்தை அதிகரிக்கவும், சீர்திருத்தம் செய்யப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பு நாடாக இடம்பெறச் செய்வதற்கும் அமெரிக்கா பணியாற்றிக்கொண்டிருக்கிறது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Prime Minister Narendra Modi on Friday told visiting US Defence Secretary Chuck Hagel that India would like to work with US defence majors on a joint development and co-production model as part of Delhi's efforts to achieve self-reliance and reduce arms import.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X