For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சித்தராமையாவுடன் லிங்காயத் மடாதிபதிகள் சந்திப்பு- தனி மத அங்கீகாரம் வழங்க வலியுறுத்தல்

லிங்காயத் மடாதிபதிகள் சித்தராமையாவை சந்தித்தனர்.

By Mathi
Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுடன் லிங்காயத் சமூகத்தின் மடாதிபதிகள் சந்தித்தனர். அப்போது லிங்காயத்துகளை வீர சைவர்களாக- தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கடக்கை தலைமையிடமாகக் கொண்ட மடாதிபதி சித்தலிங்க சுவாமிகள் தலைமையிலான குழுவினர் சித்தராமையாவை சந்தித்தனர். இச்சந்திப்பின் போது லிங்காயத்துகளை தனி மதமாக அங்கீகரித்து, சிறுபான்மை மதமாக பரிசீலிக்க வேண்டும். இது தொடர்பான நக்மோகன் தாஸ் கமிட்டியின் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Lingayat seers meet Siddaramaiah; Press religious status to community

இது தொடர்பாக சித்தலிங்க சுவாமிகள் கூறியதாவது:

நாங்கள் 900 ஆண்டுகளாக இந்த கோரிக்கையை முன்வைத்து போராடி வருகிறோம். நாங்கள் முன்வைப்பது புதிய கோரிக்கை அல்ல.

லிங்காயத்துகளை தனி மதமாக முதல்வர் சித்தராமையா அங்கீகரிப்பார் என்கிற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு சித்தலிங்க சுவாமிகள் கூறினார்.

இதனிடையே லிங்காயத்துகளின் கோரிக்கை குறித்து முடிவெடுக்க கர்நாடகா அமைச்சரவை கூட்டம் மீண்டும் நடைபெற உள்ளது. ஆனால் பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பினர் இந்த விவகாரத்தில் கனத்த மவுனம் காக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A group of Lingayat seers on Sunday met Karnataka Chief Minister Siddaramaiah and urged him to implement the report of an official committee that recommended conferring a spearate religious and minority status to their community.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X