For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆம் ஆத்மி கட்சியின் 'வாரணாசி' தேர்தல் அறிக்கை...

By Mathi
|

வாரணாசி: லோக்சபா தேர்தலில் வாரணாசி தொகுதிக்கு தனி தேர்தல் அறிக்கையை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. இதில் கங்கைநதி தூய்மை, நெசவாளர் நலன், வாரணாசி நகர கட்டமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கபப்ட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

வாரணாசி நகரை ஆன்மீக நகரமாக மேம்படுத்துவோம். அனைத்து மதத்தினவரும் ஒருங்கிணைந்து வாழும் கலாசார நகரமாக்குவோம்.

கங்கை நதியின் தூய்மை வலுப்படுத்தும் வகையில் அனைத்து தேநீர் விடுதிகள், உணவகங்களில் மண் குவளைகளே பயன்படுத்துதலை நடைமுறைப்படுத்துவோம். பிளாஸ்டிக் பயன்பாட்டை அறவே ஒழிப்போம்.

Lok Sabha Polls 2014: Aam Aadmi Party releases Varanasi manifesto

வாரணாசி நகரின் கழிவுநீர் அகற்றலை மாற்றியமைத்து முறைப்படுத்துவோம். சாலைகள், மின்சார வசதியை சீரமைப்போம்.

நெசவாளர்கள், மீனவர்கள், படகோட்டிகள், மர சிற்பங்களை செய்வோர் நலன்களைப் பாதுகாப்போம். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைக்கு தீர்வு காண்போம்.

வாரணாசியில் மோனோ ரயில் விடப்படும். நெரிசலை குறைக்க சுற்றுச் சாலைகள் அமைப்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
To breach the BJP bastion, Aam Aadmi Party will take up the cause of River-Weaver-Sewer and work to make Varanasi an all "religion spiritual city" in its electoral fight against Narendra Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X