For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லோக்சபா தேர்தலில் ஒரு முன்னாள் பிரதமர், ஒரு இந்நாள் முதல்வர், 24 முன்னாள் முதல்வர்கள் போட்டி

By Mathi
|

டெல்லி: லோக்சபா தேர்தலில் ஒரு முன்னாள் பிரதமர், ஒரு இந்நாள் முதல்வர், 24 முன்னாள் முதல்வர்கள் களத்தில் குதித்துள்ளனர். இதில் கர்நாடகத்தில் மட்டும் 6 முன்னாள் முதல்வர்கள் களமிறங்கியுள்ளனர்.

லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் தேவகவுடா 15வது முறையாக மீண்டும் களமிறங்கியுள்ளார். அவரைப் போல மொத்தம் 20 முன்னாள் முதல்வர்கள் களத்துக்கு வந்தனர்.

மேலும் தற்போது குஜராத் முதல்வராக உள்ள பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இம்முறை லோக்சபா தேர்தலில் 2 தொகுதிகளில் களமிறங்கியுள்ளார்.

வதோதரா, வாரணாசியில் மோடி

குஜராத்தி வதோதரா மற்றும் உ.பி.யின் வாரணாசியில் மோடி போட்டியிடுகிறார். வதோதராவில் காங்கிரஸின் மதுசூதன் மிஸ்திரியை எதிர்கொள்கிறார் மோடி. வாரணாசியில் ஆம் ஆத்மி தலைவரும் முன்னாள் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலை எதிர்கொள்கிறார் மோடி. காங்கிரஸ் கட்சியும் பலமான வேட்பாளரை களமிறக்க இருக்கிறது.

முன்னாள் பிரதமர் தேவ கவுடா

முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவ கவுடா அவரது சொந்த தொகுதியான கர்நாடகாவின் ஹாசனில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரது 52 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 15வது முறையாக தேர்தலை எதிர்கொள்கிறார். நாட்டின் பிரதமராக பொறுப்பேற்பதற்கு முன்பு கர்நாடகா முதல்வராக இருந்தார் கவுடா என்பதும் குறிப்பிடத்தக்கது.

குமாரசாமி.. வீரப்ப மொய்லி

கர்நாடகாவின் மற்றொரு முன்னாள் முதல்வரான தேவகவுடாவின் மகன் குமாரசாமி இம்முறை சிக்பள்ளபூர் தொகுதியில் மத்திய அமைச்சரும் முன்னாள் முதல்வருமான வீரப்ப மொய்லியை எதிர்த்து களம் இறங்கியுள்ளார்.

எதியூரப்பா

கர்நாடகாவின் இன்னொரு முன்னாள் முதல்வராக எதியூரப்பா, ஷிமோகா தொகுதியில் களமிறங்கியுள்ளார். 24 ஆண்டுகளுக்குப் பின்னர் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார் எதியூரப்பா.

சதானந்த கவுடா

கர்நாடகா மாநில முன்னாள் முதல்வரான சதானந்த கவுடா, பெங்களூர் வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

தரம்சிங்..

கர்நாடகாவின் மற்றுமொரு முன்னாள் முதல்வரும் சிட்டிங் எம்.பி.யுமான தரம்சிங், பிதார் தொகுதியைக் கேட்டுள்ளார்.

சர்ச்சில்..

கோவா முன்னாள் முதல்வரான சர்ச்சில் அலேமோ, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக தெற்கு கோவா தொகுதியில் களமிறங்கியுள்ளார்.

சந்திரபாபு நாயுடு..

ஆந்திராவில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சட்டசபை மற்றும் லோக்சபா தொகுதிகளில் போட்டியிட இருக்கிறார்.

அசோக் சவாண்

மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரான அசோக் சவாண், நன்டெட் தொகுதி களமிறக்கப்பட்டிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

கிரிதர் கோமாங்கோ

ஒடிஷாவின் முன்னாள் முதல்வரான கிரிதர் கோமாங்கோ காங்கிரஸ் வேட்பாளராகவும் அவரது மனைவி ஹேமா பிஜூ ஜனதா தள வேட்பாளராகவும் களமிறங்குகின்றனர்.

சங்கர்சிங் வகேலா

குஜராத் மாநில முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலா, சபர்கந்தா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார்.

உ.பி.யில் 4 முன்னாள் முதல்வர்கள்

உத்தரப்பிரதேசத்தில் 4 முன்னாள் முதல்வர்கள் லோக்சபா தேர்தலில் குதித்துள்ளனர்.

உமாபாரதி.. ராஜ்நாத், முலாயம், கேஜ்ரிவால்

மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் உமாபாரதி, ஜான்சி தொகுதியிலும் உ.பி. முன்னாள் முதல்வர் ராஜ்நாத்சிங் லக்னோ, முலாயம்சிங் சாதவ் மணிபுரி, ஆசம்கார் தொகுதிகளிலும் டெல்லி முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால் வாரணாசியிலும் போட்டியிடுகின்றனர். இதே உ.பி.யில்தான் குஜராத் முதல்வர் மோடியும் போட்டியிடுகிறார்.

ராப்ரிதேவி

பீகார் மாநிலத்தில் முன்னாள் முதல்வர் ராப்ரிதேவி, சரன் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அவரது சகோதரர் சாது யாதவ், சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

ராம்சுந்தர்..

பீகாரின் மற்றொரு முதல்வரான 90 வயது ராம்சுந்தர் தாஸை ஐக்கிய ஜனதா தளம் ஹாஜிபூர் தொகுதியில் களமிறக்கியுள்ளது. லோக்சபா தேர்தலில் போட்டியிடும் மிக வயதான வேட்பாளர்களில் இவரும் ஒருவர்.

அமரீந்தர்சிங்..

பஞ்சாம் முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங், அமிர்தசரஸ் தொகுதியில் பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லியை எதிர்கொள்கிறார்.

பரூக் அப்துல்லா

ஜம்மு காஷ்மீரில் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ஸ்ரீநகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

குலாம் நபி ஆசாத்..

மற்றொரு முன்னாள் முதல்வரான குலாம்நபி ஆசாத், உதம்பூர்-தோடா தொகுதி கேட்டிருக்கிறார்.

உத்தர்காண்ட்டில் 3 முன்னாள் முதல்வர்கள்..

மிகச் சிறிய உத்தர்காண்ட் மாநிலத்தில் 3 முன்னாள் முதல்வர்கள் களத்தில் உள்ளனர். கந்தூரி, பகத்சிங் கோஷியாரி மற்றும் ரமேஷ் பொக்ரியால் ஆகியோர் பாஜக வேட்பாளர்களாக களம் இறங்குகின்றனர்.

பாபுலால் மராண்டி, சிபு சோரன்

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர்கள் பாபுலால் மராண்டி, சிபுசோரன் ஆகியோரும் லோக்சபா தேர்தல் களத்தில் குதித்திருக்கின்றனர்.

English summary
One serving chief minister aspiring to the next prime minister, more than 20 former chief ministers and a former prime minister are trying their luck in the current Lok Sabha elections. It is making the elections all the more interesting. As many as 6 former chief ministers are contesting from Karnataka alone, making it the state which has fielded the maximum number of former chief ministers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X