Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் LIVE: மந்தமான மகாராஷ்டிரா- மாலை 3 மணி வரை 45.5% ஓட்டு பதிவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மகாராஷ்டிரா சட்டசபையின் 288 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் ஜார்க்கண்ட் சட்டசபையில் உள்ள 81 இடங்களுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 43 இடங்களுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 13ம் தேதி நடந்தது. 2ஆம் கட்டமாக மீதமுள்ள 38 இடங்களுக்கான வாக்குப்பதிவும் தற்போது நடைபெற்று வருகிறது.

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் தொடர்பான லைவ் அப்டேட்டுகளை இந்தப் பக்கத்தில் காணலாம்

maharashtra assembly election 2024  jharkhand assembly election 2024

Nov 20, 2024, 4:54 pm IST

மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் பலத்த பாதுகாப்புடன் வந்து வாக்களித்தார் நடிகர் சல்மான்கான்.. ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை பார்த்து கையசைத்தப்படி வாக்களித்த பின் காரில் புறப்பட்டு சென்றார்
Nov 20, 2024, 4:52 pm IST

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மத்திய அமைச்சர் முரளிதர் மோஹோல் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பிரதமர் மோடி தலைமையிலான அரசால் மகாராஷ்டிரா மாபெரும் சாதனைகளை படைத்துள்ளது. கடந்த 2.5 ஆண்டுகளில் மகாயுதி அரசு (பாஜக கூட்டணி அரசு) மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளது. மக்கள் எப்போதுமே வளர்ச்சிக்காகவும் அவர்களின் எதிர்காலத்திற்காகவுமே வாக்களிப்பார்கள். எனவே மகாயுதி அரசு மீண்டும் அவர்களின் விருப்பப்படி அமைய போகிறது" என்றார். என்சிபி- சரத்பவார் கட்சியைச் சேர்ந்த எம்பி சுப்ரியா சுலே மற்றும் மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோலே ஆகியோர் பிட்காயின் ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் புகார் குறித்த கேள்விக்கு, "இது ஒரு தீவிரமான விஷயம் என்றும் வெளிச்சத்திற்கு தற்போது வந்துள்ளது என்றும் அதுபற்றி விரைவில் விசாரிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் முரளிதர் மோஹோல் கூறினார்.
Nov 20, 2024, 4:37 pm IST

நடிகை அனன்யா பாண்டே, அவரது தாயார் பாவ்னா பாண்டே மற்றும் அவரது தந்தையும் நடிகருமான சங்கி பாண்டே ஆகியோர் மும்பையில் தங்கள் வீட்டின் அருகே உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தனர்.
Nov 20, 2024, 4:36 pm IST

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சின்ச்வாட் சட்டமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளர் சங்கர் ஜக்தாப் கூறுகையில், "அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் வைக்கிறேன்.. மஹாயுதி அரசின் (பாஜக கூட்டணி அரசின் ) பணியால் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வந்துள்ளனர். எங்கள் கூட்டணி அரசு மக்களுக்கு நிறைய நல்லது செய்துள்ளது" என்றார்.
Nov 20, 2024, 4:05 pm IST

31 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நிறைவு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பதற்றமான 31 வாக்குச் சாவடிகளில் மாலை 4 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. எஞ்சிய வாக்குச் சாவடிகளில் மாலை 5 மணியுடன் வாக்குப் பதிவு முடிவடையும்.
Nov 20, 2024, 3:46 pm IST

வாக்களித்த அம்பானிகள்

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மகன்கள் ஆனந்த் அம்பானி, ஆகாஷ் அம்பானி உள்ளிட்டோர் குடும்பத்துடன் மும்பையில் வாக்களித்தனர்.
Nov 20, 2024, 3:43 pm IST

மகாராஷ்டிரா மந்தம்

மகாராஷ்டிரா மந்தம்
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் மாலை 3 மணி வரை 45.5% வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன.
Nov 20, 2024, 3:43 pm IST

ஜார்க்கண்ட் 61.5% வாக்கு பதிவு

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலின் இறுதிக் கட்டத்தில் மாலை 3 மணி வரை 61.5% வாக்குகள் பதிவாகி உள்ளன.
Nov 20, 2024, 3:31 pm IST

நாசிக்கில் மோதல்

மகாராஷ்டிரா நாசிக் நந்தகோன் தொகுதியில் சிவசேனா வேட்பாளர் சுஹாஸ் கண்டே, சுயேட்சை வேட்பாளர் சமீர் பூஜ்பால் இடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றம் உருவானது.
Nov 20, 2024, 3:21 pm IST

மும்பையில் அமைதியான வாக்குப் பதிவு

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது; எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்- மும்பை போலீஸ் கமிஷனர் விவேக் பன்சல்கா
Nov 20, 2024, 3:19 pm IST

மாதுரி தீட்சித்- பாலிவுட் நட்சத்திரங்கள் படையெடுப்பு

மாதுரி தீட்சித் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் பெரும் எண்ணிக்கையில் தொடர்ந்து வாக்களித்து வருகின்றனர்.
Nov 20, 2024, 3:17 pm IST

10,080 கிலோ வெள்ளி பறிமுதல்

மகாராஷ்டிரா மாநிலம் துலியா மாவட்டத்தில் வாக்குப் பதிவு தொடங்குவதற்கு சற்று முன்னர் 10,080கிலோ வெள்ளி பொருட்களுடனான டிரக் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Nov 20, 2024, 3:08 pm IST

உ.பி. போலீஸ் சஸ்பெண்ட் ஏன்?

உத்தரப்பிரதேசத்தில் வாக்காளர்களின் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை சில வாக்குச் சாவடிகளில் போலீசார் ஒப்பீடு செய்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது; போலீசாருக்கு இப்படியான அதிகாரம் தரப்படவில்லை என தேர்தல் ஆணையத்துக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடிதம் அனுப்பினார். இதனடிப்படையில் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையை ஒப்பீடு செய்த போலீசார் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
Nov 20, 2024, 2:56 pm IST

ஷங்கர் மகாதேவன் வாக்களிப்பு

மகாராஷ்டிரா மும்பையில் பாடகர் ஷங்கர் மகாதேவன் குடும்பத்தினருடன் வாக்களித்தார்
Nov 20, 2024, 2:53 pm IST

பாஜகவுக்கு தோல்வி பயம்

உபி சட்டசபை இடைத்தேர்தல்களில் பாஜக தோற்றுவிடும் என்கிற அச்சத்தினால் பல்வேறு பொய்களை பரப்புகிறது- டிம்பிள் யாதவ், சமாஜ்வாதி கட்சி
Nov 20, 2024, 2:33 pm IST

ஜார்க்கண்ட்டிலும் தேர்தல் புகார்

ஜார்க்கண்ட் வாக்குச் சாவடிகளில் ஆளும் ஜேஎம்எம் கூட்டணி அரசுக்கு ஆதரவாக தேர்தல் அதிகாரிகள் செயல்படுவதாக தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் தெரிவித்துள்ளது.
Nov 20, 2024, 2:32 pm IST

தேர்தல் ஆணையம் மீது புகார்

வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டிருக்கிறது என இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது மத்திய அமைச்சர் நிதின் கட்காரி புகார் தெரிவித்துள்ளார். நாக்பூரில் குடும்பத்தினருடன் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதின் கட்காரி இதனைத் தெரிவித்தார்.
Nov 20, 2024, 2:28 pm IST

பதற்றத்தில் உபி இடைத்தேர்தல்கள்

உத்தரப்பிரதேச சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான தேர்தல் நடத்தை விதிகளை மீறிய 7 போலீசார், தேர்தல் ஆணையத்தால் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
Nov 20, 2024, 2:20 pm IST

சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நிலவரம்

பகல் 1 மணி வரை சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நிலவரம் கேரளா பாலக்காடு 40.16%; பஞ்சாப் சப்பேவால் 27.95% ; பஞ்சாப் கித்தெர்பாஹா 50.09% ; பஞ்சாப் தேரா பாபா நானாக் 40.40%; பஞ்சாப் பர்னாலா 28.10%; உ.பி. காசியாபாத் 20.92% ; உ.பி. சிசாமாவ் 28.50% உ.பி. மஜ்ஹவான் 31.68%; உ..பி. மீராபூர் 36.77%; உ.பி.கைர் 28.80% ; உ.பி. புல்பூர் 26.67% ; உ.பி. குந்தர்கி 41.01% ; உ.பி. கர்ஹால் 32.29% ;உ,பி. கதேஹரி 36.54% ; உத்தரகாண்ட் கேதார்நாத் 34.40%
Nov 20, 2024, 2:16 pm IST

மகாராஷ்டிரா 32.18%; ஜார்க்கண்ட்- 47.92%

மகாராஷ்டிரா 32.18%; ஜார்க்கண்ட்- 47.92%
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பகல் 1 மணி வரை 32.18% வாக்குகள் பதிவாகி உள்ளன. ஆனால் ஜார்க்கண்ட் மாநில இறுதி கட்டத் தேர்தலில் பகல் 1 மணி வரை 47.92% வாக்குகள் பதிவாகி உள்ளன
Nov 20, 2024, 1:23 pm IST

மீண்டும் மகாயுதி கூட்டணி ஆட்சி- பிரபுல் பட்டேல்

மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணி ஆட்சிதான் மீண்டும் அமையும் என்று தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மகாயுதி கூட்டணி 175-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றும் என்கிறார் பிரபுல் பட்டேல்
Nov 20, 2024, 1:12 pm IST

கள்ள ஓட்டு புகார்

உ.பி. முசாபர்நகர், மீராபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போலி வாக்காளர் அடையாள அட்டைகள் மூலம் கள்ள ஓட்டுகள் போடப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பாஜக புகார் கடிதம் அனுப்பி உள்ளது.
Nov 20, 2024, 1:11 pm IST

வாக்குப் பதிவு மந்தம்- மக்கள் ஆர்வம் இல்லை

மகாராஷ்டிராவில் வாக்குப் பதிவு சதவீதம் மிக குறைவாக உள்ளது; மக்களுக்கு அரசியல் மீதான ஆர்வம் இல்லாமையையே இது வெளிப்படுத்துகிறது- வாக்களித்த பின்னர் நடிகர் துஷ்யார் கபூர் பேட்டி
Nov 20, 2024, 1:09 pm IST

உ.பி. இடைத்தேர்தல் வெற்றி- பாஜக நம்பிக்கை

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜகவே பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெல்லும்- மாநில அமைச்சர் சஞ்சய் நிஷாத் நம்பிக்கை
Nov 20, 2024, 12:57 pm IST

மகாராஷ்டிராவில் குறைந்த வாக்குப் பதிவு

மகாராஷ்டிராவில் வாக்குச் சாவடிகளில் நீண்ட வரிசைகளில் வாக்காளர்கள் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்; ஆனாலும் வாக்குப் பதிவு சதவீதம் மிக குறைவானவதாகவே உள்ளது
Nov 20, 2024, 12:41 pm IST

நாசிக்கில் 3,000 போலீசார் குவிப்பு

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் நாசிக் பகுதியில் மட்டும் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். 1,250 வாக்குச் சாவடிகளில் நாசிக் பகுதியில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
Nov 20, 2024, 12:36 pm IST

உத்தவ் தாக்கரேவுக்கு 10-12 சீட் கிடைக்கும்: பாஜக எம்பி

மகாராஷ்டிரா சட்டசபையில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவுக்கு 10 முதல் 12 இடங்கள்தான் கிடைக்கும்; மகாயுதி கூட்டணியின் 161 எம்.எல்.ஏக்களும் மீண்டும் வெற்றி பெறுவர்; என்னை உருவாக்கியது பால்தாக்கரே; ஆனால் உத்தவ் தாக்கரேவால்தான் சிவசேனாவை விட்டு வெளியேறினேன். அவரது கொள்கைகள் சரியானவை அல்ல- பாஜக எம்பி நாராயண் ரானே
Nov 20, 2024, 12:33 pm IST

வாக்கு சதவீதம் மிகவும் குறைவு

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் வாக்களிக்க மக்கள் ஆர்வமாக உள்ளனர்; ஆனால் வாக்கு சதவீதம் மிகவும் குறைவாகவே இருக்கிறது; பொதுமக்கள் வாக்களிக்க முன்வர வேண்டும்- மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
Nov 20, 2024, 12:25 pm IST

மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி- ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும்; மகா விகாஸ் அகாடியால் முட்டுக்கட்டை போட்ட திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவோம்- முதல்வர் ஏக்நாத் ஷிண்டே
Nov 20, 2024, 12:23 pm IST

வாக்களித்த அனுபம் கெர்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பாலிவுட் நட்சத்திரம் அனுபம் கெர் வாக்களித்தார்.
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+