Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரயில் முன் நின்ற டீன் ஏஜ் பாய்!.. "அந்த" ஹீரோ மட்டும் இல்லன்னா.. பதைபதைக்கும் வீடியோ!

Subscribe to Oneindia Tamil

தானே: மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் ஒரு உயிரை காப்பாற்ற ரயில்வே போலீஸ்காரர் செய்த செயல் வைரலாகி வருகிறது.

ரயில் நிலையங்கள், ரயில்களில் பாதுகாப்பை உறுதி செய்ய ரயில்வே போலீஸார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களது பணி குற்றச் செயல்கள் நிகழாமல் தடுப்பது, நிகழ்ந்த குற்றங்களை விசாரிப்பது, ரயில் விபத்தின் போது செயல்படுவது போன்றவையாகும். அண்மைக்காலமாக ரயில்வே போலீஸார் பெரும்பாலானோர் நிறைய பேரின் உயிர்களை காப்பாற்றும் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

எத்தனையோ பேர் ரயிலை பிடிக்க ஓடி வரும் போது தடுக்கி தண்டவாளத்தினுள் விழுந்தனர். அவர்களை ஓடி சென்று காப்பாற்றும் பணிகளை ரயில்வே போலீஸார் செய்துள்ளனர். அது போல் ஓடும் ரயிலில் ஏறும் போது தவறி விழுவோரையும் காப்பாற்றி அந்த நேரத்தில் அவர்களுக்கு கடவுளாக காட்சி அளித்துள்ளார்கள்.

வெளிமாநிலம்

வெளிமாநிலம்

நேற்று கூட வெளிமாநிலத்தில் ஒரு சம்பவம்... ஒரு முதியவர் ஓடும் ரயிலில் ஏற முயற்சிக்கிறார். அப்போது அவர் தடுமாறி பிளாட்பாரத்திற்கும், ரயிலுக்கும் இடையே உள்ள கேப்பில் விழுந்து விடுகிறார். இதை கண்ட மக்கள் பதறுகிறார்கள். அப்போது அங்கிருந்த ஆர்பிஎஃப் (ரயில்வே போலீஸ்) போலீஸ் மிகவும் சாதுர்யமாக செயல்படுகிறார்.

முதியவரை காப்பாற்ற

முதியவரை காப்பாற்ற

ஒரு கனம் கூட யோசிக்காமல் அந்த முதியவரை காப்பாற்ற ஓடும் ரயிலில் ஏறி ரயிலை நிறுத்தும் சங்கிலியை பிடித்து இழுத்தார். உடனே ரயில் நின்றுவிடுகிறது. உடனே அந்த முதியவரும் எந்தவித சேதமும் இன்றி காப்பாற்றப்படுகிறார். அந்த ரயில்வே போலீஸ் சிறிது சாதுர்யம் இல்லாமல் இருந்திருந்தால்... நினைக்கவே மனம் பதறுகிறது.

துச்சமாக நினைத்த போலீஸ்காரர்

துச்சமாக நினைத்த போலீஸ்காரர்

இந்த சமயங்களில் தங்கள் உயிரையும் துச்சமாக போலீஸார் கருதுகிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இது போன்றதொரு சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் நடந்துள்ளது. கடந்த 23 ஆம் தேதி தானே மாவட்டத்தில் உள்ள வித்தல்வாடி ரயில் நிலையத்தில் நடந்த காட்சிதான் தற்போது வைரலாகி வருகிறது.

 33 வினாடிகள்

33 வினாடிகள்

33 வினாடிகள் அடங்கிய அந்த காட்சியை பார்க்கும் போது பதைபதைப்பு ஏற்படுகிறது. ஒரு மஞ்சள் நிற டீசர்ட் அணிந்த டீன் ஏஜ் வயதை சேர்ந்த ஒருவர் பிளாட்பார்மில் நின்று கொண்டிருக்கிறார். பார்ப்பதற்கு அவர் அவ்வழியாக வரும் ரயிலில் ஏறுவதற்கு காத்திருப்பது போல் தெரிகிறது. அவரை கடந்து ஒரு போலீஸாரும் செல்கிறார்.

ரயில் வருகிறது

ரயில் வருகிறது

அந்த பிளாட்பாரமுக்கு மெதுவாக ரயில் வருவது சற்று தூரத்தில் இருந்தே தெரிகிறது. உடனே அந்த டீன் ஏஜ் சிறுவன், ரயில்வே டிராக்கில் குதிக்கிறார். உடனே ரயில் வரும் நேரத்தில் தனது கைகளை பின்புறமாக கட்டிக் கொண்டு நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறார். அங்கிருப்பவர்கள் ரயில் வருது ரயில் வருது என கூச்சல் போடுகிறார்கள். ஆனால் அந்த நபர் அசரவே இல்லை.

பரபரப்பான ரயில் நிலையம்

பரபரப்பான ரயில் நிலையம்

அந்த போலீஸ்காரரும் அந்த நபரை டிராக்கை விட்டு வெளியே செல்லுமாறு கூறுகிறார். ஆனாலும் அவர் கேட்டபாடில்லை. அந்த நபரை காட்டிலும் ஒரு உயிர் போய்விடுமே என்ற பதைபதைப்பில் போலீஸ்காரர் பரபரப்பாக காணப்படுகிறார். ரயில் அருகே வருகிறது. ஒரு வினாடிக்கும் குறைந்த நேரம் போலீஸ்காரர் யோசிக்கிறார்.

தண்டவாளத்தில் குதிக்கும் போலீஸ்

தண்டவாளத்தில் குதிக்கும் போலீஸ்

உடனே தண்டவாளத்தில் குதிக்கிறார். அந்த நபரை டிராக்கிற்கு அப்பால் இழுத்துக் கொண்டு ஓடுகிறார். அடுத்த வினாடி ரயிலும் வருகிறது. நல்லவேளையாக அந்த நபர் காப்பாற்றப்பட்டார். இதில் அந்த ரயில்வே போலீஸ்காரர்தான் உண்மையான ஹீரோ... அந்த ஒரு வினாடிக்கும் குறைவான நேரம் அவர் சுயநலமாக யோசித்திருந்தால்.. அந்த இளைஞரின் உடல் துண்டாகியிருக்கும்.

சமயோஜிதம், பாராட்டு

சமயோஜிதம், பாராட்டு

ஒரு வேளை ரயில் தண்டவாளத்தில் குதித்த போலீஸ்காரர் இடறி தண்டவாளத்தில் விழுந்திருந்தால் அவரையும் சேர்ந்து இந்த நாடு இழந்திருக்கும்... ஆனால் அவர் சரியாக தண்டவாளத்தில் நிற்கும் படி குதித்ததால்தான் தானும் பிழைத்து அந்த இளைஞரையும் காப்பாற்ற வேண்டிய சூழல் நிலவியது. இந்த சம்பவம் வைரலாகி வருகிறது. அங்கிருந்த பயணிகள் ரயில்வே போலீஸாரை வெகுவாக பாராட்டினர். சமூகவலைதளங்களிலும் ரியல் ஹீரோ என அழைக்கப்படுகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+