For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் விலகியதற்கு மமதா வரவேற்பு

By Mathi
Google Oneindia Tamil News

கொல்கத்தா: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் விலகியதற்கு மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி வரவேற்பு தெரிவித்துள்ளார். நாடு நாசமாவதை தடுக்க இத்தகைய நடவடிக்கை தேவை என குறிப்பிட்டுள்ளார் மமதா பானர்ஜி.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இதனால் பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் விலகிவிட்டது.

Mamata Banerjee welcomes TDPs decision to quit NDA

அத்துடன் மோடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர தெலுங்குதேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நோட்டீஸ் கொடுத்துள்ளன. பாஜக அணியில் இருந்து தெலுங்குதேசம் விலகியிருப்பதற்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் மமதா பானர்ஜி பதிவிட்டுள்ளதாவது: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் விலகும் முடிவை வரவேற்கிறேன்.

நாடு நாசமாவதைத் தடுக்க இந்த நடவடிக்கை அவசியம். தற்போதைய அரசியல் சூழலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு மமதா பானர்ஜி பதிவிட்டுள்ளார்.

English summary
West Bengal Chief Minister Mamata Banerjee has welcomed the decision of Telegu Desam Party's decision to quit the BJP lead NDA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X