For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடியுரிமை சட்டம்: பேரணியில் மம்தா.. சத்தியாகிரகத்தில் பினராயி.. மாஸ் காட்டும் இரு மாநில முதல்வர்கள்

Google Oneindia Tamil News

குடியுரிமை சட்டம்: பேரணியில் மம்தா.. சத்தியாகிரத்தில் பினராயி.. மாஸ் காட்டும் இரு மாநில முதல்வர்கள்

கொல்கத்தா: குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டது போல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பேரணியில் ஈடுபட்டுள்ளார்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2015-ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை இந்தியாவில் குடியேறிய அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் மசோதா அண்மையில் இரு அவைகளிலும் நிறைவேறியது.

இந்த சட்டத்திருத்தத்தில் முஸ்லீம் சமூகத்தினர் சேர்க்கப்படாததாலும் இன்னும் சில திருத்தங்களை மேற்கொள்ள கூறியும் இந்தியா முழுவதும் போராட்டம் வலுபெற்றுள்ளது.

ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன? எப்போது வன்முறை வெடித்தது? டெல்லி போலீஸ் விளக்கம்ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன? எப்போது வன்முறை வெடித்தது? டெல்லி போலீஸ் விளக்கம்

இந்தியாவின் சூழல்

இந்தியாவின் சூழல்

வடகிழக்கு மாநிலங்கள் உள்பட வடஇந்தியாவில் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் தற்போது கேரளத்திலும் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் சூழலை உருவாக்கியது பாஜகவும் ஆர் எஸ் எஸ் அமைப்பும்தான்.

போராட்டம்

போராட்டம்

அவர்களது செயல்திட்டத்தை அமல்படுத்த முயற்சிக்கிறார்கள். நாட்டில் தற்போதைய சூழல் மிகவும் கொந்தளிப்பாக உள்ளது. குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கேரளாவும் துணை நிற்கிறது என்றார். அது போல் மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியும் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்.

காங்கிரஸ் தொண்டர்கள்

காங்கிரஸ் தொண்டர்கள்

குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் கொல்கத்தாவில் இன்று முதல்வர் மம்தா தலைமையிலான பேரணியில் பல்லாயிரக்கணக்கான திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றனர்.

அமித்ஷா

அமித்ஷா

அவர்கள் மத்திய அரசு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியவாறு கொல்கத்தா நகரின் முக்கிய சாலைகள் வழியாக நடந்துச் சென்றனர். குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில் இன்னும் பல மாநிலங்களின் முதல்வர்களும் இது போன்று போராட்டம் நடத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Like Kerala CM Pinarayi Vijayan participate in Satyagraha, West Bengal CM Mamta Banerjee holds rally in Kolkatta against Citizenship amendment act.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X