சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்- ஒரு சி.ஆர்.பி.எப். வீரர் வீரமரணம்- 10 பேர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். 10 சி.ஆர்.பி.எப். வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

சத்தீஸ்கரின் சுக்மா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் தொடருகிறது. சுக்மா வனப்பகுதியில் சனிக்கிழமையன்று தடெட்லா கிராமத்தில் சி.ஆர்.பி.எப்.-ன் கமாண்டோ பட்டாலியன் படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

Maoist attack in Chhattisgarh- One CRPF commando killed, 10 injured

இந்த நடவடிக்கையை முடித்துவிட்டு முகாம்களுக்கு சி.ஆர்.பி.எப். வீரர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர். நேற்று இரவு 10 மணியளவில் வனப்பகுதியில் மறைந்திருந்த மாவோயிஸ்டுகள், சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து கண்ணிவெடித் தாக்குதல் நடத்தினர்.

இதில் துணை தளபதி நிலையிலான ஒரு சி.ஆர்.பி.எப். வீரர் வீரமரணம் அடைந்தார். படுகாயமடைந்த 10 பேர் ராய்ப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாவோயிஸ்டுகளின் சத்தீஸ்கர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த அதிகாரி ஶ்ரீ நிதின் புருஷோத்தம் பலெராவ் என சி.ஆர்.பி.எப்.-ன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+