இப்போது மீரா குமாருக்கே ஆதரவு- மாயாவதி அதிரடி அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லக்னோ: ஜானாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரான மீரா குமாரை ஆதரிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டார். அவர் பாஜகவை சேர்ந்தவராக இருந்தாலும் தலித் என்பதால் ஆதரிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்தார்.

Mayawati supports Meira Kumar

இந்நிலையில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் லோக்சபா சபாநாயகர் மீரா குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மாயாவதி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

எதிர்கட்சிகளின் வேட்பாளரான மீரா குமார் பாஜக வேட்பாளரான ராம்நாத் கோவிந்தை விட திறமையானவர், பிரபலமானவர். ராம்நாத் கோவிந்த் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்.

அதனால் என் ஆதரவு மீரா குமாருக்கே என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bahujan Samaj Party chief Mayawati said that her party will support Opposition's candidate former Lok Sabha speaker Meira Kumar in the presidential election.
Please Wait while comments are loading...