ஆப் பைட்டியே... 5 ஆண்டுகள் லோக்சபாவை சுவாரஸ்யமாக நடத்திய மீரா குமார் #MeiraKumar

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆப் பைட்டியே என்ற வார்த்தையை கேட்டாலே லோக்சபா சபாநாயகர் மீரா குமார்தான் நினைவுக்கு வருவார். அந்த அளவிற்கு சுவாரஸ்யமாக சபையை நடத்தியவர் இன்று எதிர்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

லோக்சபாவின் முதல் பெண் சபாநாயகர் என்ற பெருமைக்குரியவர் மீரா குமார். அவர் சபாநாயகராக தேர்வான பின்னர் சபையை நடத்தும் போது பல எம்பிக்களும் பழக்கதோஷத்தில் சார் என்றே அழைத்தனர். பின்னர் ஒருவழியாக சமாளித்துக் கொண்டு மேடம் ஸ்பீக்கர் என்று மாற்றிக் கொண்டனர்.

 அசால்ட் சபாநாயகர்

அசால்ட் சபாநாயகர்

லோக்சபாவில் அப்போது எதிர்கட்சியாக இருந்த பாஜக தினசரியும் அனலை கிளப்பும். லோக்சபாவில் அவர் சபையை நடத்தும்போது நார்மலாக பேசியதை விட அப்நார்மலாக பிரச்சினையைக் கிளப்புபவர்களை உட்கார வைக்க படும்பாடுதான் ரொம்ப அதிகம். ஆனாலும் அசால்டாக சபையை நடத்தினார்.

 ஆப் பைட்டியே

ஆப் பைட்டியே

எதிர் கட்சி உறுப்பினர்கள் எழுந்து கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டாலும்... அவர் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. சுனோ, பைட்டியே, ஆப் பைட்டியே, அச்சா ஆகியவைதான் அவர் அதிகம் பயன்படுத்திய வார்த்தைகளாக இருக்கும்.

 ஓவர் சத்தம் ஆகாது

ஓவர் சத்தம் ஆகாது

மீரா குமாரின் குரல் மென்மையாகவே இருக்கும் எதிர்கட்சியினர் கத்தி கூச்சல் போடுவார்கள். சபாநாயகரை எதையுமே அதிகம் பேச விடாத அளவுக்கு சத்தம் ஜாஸ்தியாகவே இருக்கும் பெரும்பாலும்.

 மிளகு பொடி சர்ச்சை

மிளகு பொடி சர்ச்சை

நாடாளுமன்றத்துக்குள் மிளகுப் பொடியைத் தூவி எம்.பிக்கள் விளையாடிய ஆட்டம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மிளகு பொடி என்ன? மிளகாய்ப் பொடியே தூவினாலும் நாங்க அசரமாட்டோம் என்று கூறி கட்டுப்கோப்பாக சபையை நடத்தியவர் மீரா குமார்.

 சமூக வலைத்தளங்களில் மீரா குமார்

சமூக வலைத்தளங்களில் மீரா குமார்

மீரா குமாரின் ஆப் பைட்டியேவை வைத்தே சமூக வலைத்தளங்களில் அதிகம் கிண்டலடித்தனர். மிளகு பொடி சர்ச்சைக்கு கூகுள் டூடுள் போட்டு சமுக வலைத்தளங்களில் கிண்டலடித்தனர்.

 மீண்டும் லைம் லைட்டில் மீரா குமார்

மீண்டும் லைம் லைட்டில் மீரா குமார்

2014ஆம் ஆண்டு வரை சபாநாயகராக பதவி வகித்த மீரா குமார், பாஜக ஆட்சி வந்த பின்னர் மக்களால் மறக்கப்பட்டிருந்தார். தற்போது எதிர்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் மீண்டும் லைம் லைட்டிற்குள் வந்துள்ளார்.

 பழக்க தோஷத்தில் ஆப் பைட்டியே

பழக்க தோஷத்தில் ஆப் பைட்டியே

எதிர்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வாகியுள்ள மீரா குமார் ஒருவேளை வெற்றி பெற்று ஜனாதிபதியானால் நாடாளுமன்ற கூட்டத்தில் உரையாற்றும் போது பழக்க தோஷத்தில் ஆப் பைட்டியே என்று கூறாமல் இருந்தால் சரிதான்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Meira Kumar had stole the limelight during her stint as the speaker of the Lok Sabha during UPA govt.
Please Wait while comments are loading...