For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வறுமை கோட்டுக்கு கீழயும் வர்ல, ரிச் மேன்களின் சலுகையும் இல்லை... பட்ஜெட் பற்றி மிடிஸ் கிளாஸ் டுவீட்!

மத்திய பட்ஜெட் நடுத்தர வர்க்க மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்ற கருத்தை பலரும் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    நடுத்தர வர்க்கத்தை டீலில் விட்ட மத்திய அரசு..பின்னணி என்ன?- வீடியோ

    டெல்லி : மத்திய பட்ஜெட் நடுத்தர வர்க்க மக்களின் எதிர்பார்பப்களை பூர்த்தி செய்யவில்லை, மாறாக ஏமாற்றத்தையே தந்திருக்கிறது. டுவிட்டரில் மிடிஸ் கிளாஸ் என்ற ஹேஷ்டேக் கீழ் பலரும் பட்ஜெட் குறித்த தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றன, அவற்றின் சில வேதனையான கொந்தளிப்புகள் இதோ.

    மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி நேற்று தாக்கல் செய்த பொதுபட்ஜெட் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. பண வீக்கத்தால் ஏற்றம் கண்டுள்ள விலைவாசி உயர்வு மாத சம்பளத்தில் மிச்சம் பிடிக்க முடியாத நிலை இருப்பதால் இதில் இருந்து நிம்மதி தரும் வகையில் பட்ஜெட் இருக்கும் என்று பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்தனர்.

    குறைந்தபட்சம் வருமான வரி விலக்கு உச்சவரம்பு அளித்து அதில் பணத்தை சேமிக்கும் வாய்ப்பாவது மக்களுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாட்டின் வருமானமே தனி நபர் வருமான வரியில் தான் அதிகம் இருக்கிறது என்பதால் வருமான வரி உச்சவரம்பில் அரசு எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. அரசின் பட்ஜெட் அறிவிப்பு குறித்து பலரும் டுவிட்டரில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    வரியால் மிடிஸ் கிளாஸை வாட்டும் அரசு

    கடவுளிடம் வரம் பெறுவது போல நிறுவனங்களில் பணியாற்றி மாத சம்பளம் பெறுகின்றனர் மிடிஸ் கிளாஸ் மக்கள். ஆனால் அரசு வரி என்ற பெயரில் அதனை பிடுங்குவதை பாஞ்சாலிக்கு கிருஷ்ணன் உடை கொடுக்க துச்சாதனன் துகில் உரித்த நிகழ்வோடு ஒப்பிட்டு போட்டுள்ளார் இவர்.

    எதிர்பார்த்தது கைக்கு கிடைக்கலையே

    மத்திய பட்ஜெட்டில் மிடிஸ் கிளாஸ் மக்களுக்கு இருக்கு ஆனா இல்லை என்பது போன்ற ஒரு வீடியோவை போட்டுள்ளார் இவர். நேர்மையாக வரி கட்டுபவர்கள் பட்ஜெட்டில் சில சலுகைகளை எதிர்பார்த்தனர், அவர்களுக்கு மிஞ்சியது என்ன? வரிச்சலுகை என்பது கைக்கு எட்டவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளார் இவர்.

    மோசமான பொருளாதாரம்

    மக்கள் அரசுக்காக எல்பிஜி மானியத்தை விட்டுக் கொடுத்தார்கள், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது உடன் இருந்தார்கள், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட போது அந்த வலியை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் மக்களுக்கு பட்ஜெட்டில் என்ன செய்திருக்கிறீர்கள். இது மோசமான அரசியல், மோசமான பொருளாதாரம், மிடிஸ் கிளாஸ் மக்களின் பொறுமையை உங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளாதீர்கள் என்று தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார் இவர்.

    ஏழைக்கான சிம்பதியும் இல்லை

    மிடிஸ் கிளாஸ் மக்களுக்கு மட்டும் வரியை போட்டு அரசு கதவை சாத்திவிட்டது, கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை தந்து தாராளமாக விட்டுள்ளதை இந்த நெட்டிசன் பதிவிட்டுள்ளார். மிடிஸ் கிளாஸ் மக்கள் எப்போதுமே தியாகம் செய்பவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்கள் என்ற சிம்பதியும் இல்லை, பணக்காரர்களுக்கான சலுகையும் இல்லை என்று வேதனைபட்டுள்ளார் இவர்.

    வேதனையில் மிடிஸ் கிளாஸ்

    மத்திய பட்ஜெட்டை பார்த்து மிடிஸ் கிளாஸ் மக்கள் மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் மனதிற்குள்ளேயே வேதனைப்படுவதை வீடியோ மூலம் வெளிப்படுத்தியுள்ளார் இவர். ஷாருக்கான் தனி அறைக்குள் குமுறி அழும் வீடியோவை பட்ஜெட் ரியாக்ஷனாக பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

    English summary
    Middle class people were not satisfactory over budget 2018, twitter trending the hashtag #middle class with loads of oppose against centre's budget is not satisfactory to the middle class.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X