மாலத்தீவில் வசிக்கும் இந்தியர்களுக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: மாலத்தீவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் அங்கு வசிக்கும் இந்தியர்கள் தேவையின்றி பயணம் செய்வதை தவிர்க்குமாறு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மாலத்தீவின் முன்னாள் பிரதமர் முகமது நஷீத் உள்பட அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் 12 எம்பிக்களை தகுதிநீக்கம் செய்ததை திரும்ப பெற வேண்டும் என்றும் மாலத்தீவுகளில் உள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை அதிபர் யாமீன் தலைமையிலான அரசு ஏற்க மறுத்துவிட்டது.

Ministry of External Affairs advices Indians in Maldives

இதனால் அதிபர் அப்துல்லா யாமீனுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. இவை தீவிரமடைந்ததை அடுத்தும் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தவிர்க்கவும் அதிபர் யாமீன் 15 நாட்களுக்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் மாலத்தீவில் வசிக்கும் இந்தியர்கள் தேவையின்றி பயணம் செய்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
State of Emergency has been declared in Maldives for 15 days.Indian External Affairs Ministry advices Indians not to travel unnecessarily.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற