மிதாலி ராஜூக்கு பிஎம்டபிள்யூ காரை பரிசாக வழங்கினார் ஹைதராபாத் தொழிலதிபர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜூக்கு, பிஎம்டபிள்யூ கார் ஒன்றை, ஹைதராபாத் தொழிலதிபர் பரிசாக வழங்கி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் வி.சாமூண்டீஸ்வர நாத். தொழிலதிபரான இவர், சமீபத்தில் நடைபெற்ற மகளிர் உலக கிரிக்கெட் கோப்பைத் தொடரில், இந்திய அணியை இறுதிப் போட்டி வரை வழிநடத்திச் சென்ற கேப்டன் மிதாலி ராஜை பாராட்ட முடிவு செய்தார்.

Mithali Raj presented BMW car by V Chamundeswaranath in Hyderabad

இதற்காக, மிதாலிக்கு, பிஎம்டபிள்யூ கார் ஒன்றைப் பரிசாக வழங்க உள்ளதாக அறிவித்தார். இதனையடுத்து, இன்று புத்தம் புது பிஎம்டபிள்யூ காரின் சாவியை மிதாலி ராஜிடம் சாமூண்டீஸ்வர நாத் வழங்கினார்.

'இந்திய கிரிக்கெட் உலகில் அவர் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளார். அதனால்தான் மிதாலிக்கு இந்தப் பரிசை வழங்கியுள்ளதாக', சாமூண்டீஸ்வர நாத் குறிப்பிட்டுள்ளார். பெண்கள் இடையே கிரிக்கெட் மீதான ஆர்வம் தற்போது அதிகரிக்கவும், மிதாலி ராஜ் முக்கிய காரணமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Businessman V Chamundeswaranath fulfilled his promise of gifting BMW to Indian women's team skipper Mithali Raj on Tuesday.
Please Wait while comments are loading...