கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க
சென்னை: கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வைத்திருப்பவர்கள் மத்தியில் தள்ளுபடி குறித்து தற்போது ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.. கடந்த சில மாதங்களாகவே, தாங்கள் வாங்கிய நகைக்கடன்களுக்கு அரசு தள்ளுபடி வழங்குமா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.. எனினும், கூட்டுறவு வங்கிகளில் வழக்கமாக நகைக்கடன் தள்ளுபடி விவகாரத்தில் சில யதார்த்த நிலவரங்களையும் அறிந்து கொள்ள வேண்டி உள்ளது.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
நகைக்கடன் தள்ளுபடி என்பது எல்லா கடன்களுக்கும் பொதுவான ஒன்றாக இருக்காது.. இதில் பல நிபந்தனைகள் விதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்..பொதுவாக விவசாய கடன்கள், மிகக் குறைந்த தொகை கொண்ட கடன்கள் மற்றும் குறிப்பிட்ட கால வரம்பிற்குள் வாங்கப்பட்ட கடன்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது..
இதனால் 5 வருடங்களுக்கு முன்பு கடன் வாங்கியவர்களுக்கு தள்ளுபடி கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், அது அனைவருக்கும் தானாகவே கிடைத்துவிடும் என்று சொல்லிவிட முடியாது.. ஒவ்வொரு கடனும் தனித்தனியாக ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தள்ளுபடி பட்டியல் தயாராகும்..

யாருக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி உறுதி
இந்த தள்ளுபடி திட்டத்தில் பலர் ஏமாந்து போவதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.. அதுதான் ஆவணங்கள் மற்றும் தகவல்கள் குளறுபடி.. கடன் வாங்கும்போது சரியான முகவரி சான்று கொடுக்காமல் இருப்பது, அல்லது ஒருவரின் பெயரில் வேறொருவர் கடன் வாங்கியிருப்பது போன்ற சிக்கல்கள் இருந்தால் அந்த கடன்கள் தள்ளுபடி பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கப்படலாம்.
குறிப்பாக, வங்கியில் உள்ள பதிவேடுகளில் உங்களின் விவரங்கள் சரியாக இல்லையென்றால், நீங்கள் தள்ளுபடிக்கு தகுதியானவராக இருந்தாலும் தொழில்நுட்ப காரணங்களால் அந்த வாய்ப்பை இழக்க நேரிடும்.. "நமக்கும் தள்ளுபடி கிடைக்கும்" என்று நம்பிக்கையோடு இருப்பவர்களுக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சியாக அமையலாம்..
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி
இப்போது கூட்டுறவு வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.. தங்கள் பெயர் தள்ளுபடி பட்டியலில் வருமா, பழைய கடன்களுக்கு என்ன நிலைமை என்று பலரும் அதிகாரிகளிடம் கேட்டு வருகின்றனர்.. ஆனால், அரசு இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை.. அதுவரை தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்..
அதற்கு பதிலாக, உங்கள் கடனுக்கான ஆவணங்கள் சரியாக இருக்கிறதா, வங்கியில் உங்கள் ஆதார் மற்றும் இதர விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை முன்கூட்டியே சரிபார்த்துக்கொள்வது நல்லது..
ஒரு சிறிய கவனக்குறைவு அல்லது ஆவணத்தில் இருக்கும் ஒரு பிழை கூட, உங்கள் நகையை மீட்கும் பொன்னான வாய்ப்பை தட்டிப்பறித்துவிடும்.. எனவே, வெறும் எதிர்பார்ப்பில் மட்டும் இருக்காமல், சட்ட ரீதியான நடைமுறைகளை சரியாக பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே நகையும் நிம்மதியும் மீண்டும் கிடைக்கும் என்பதுதான் யதார்த்தமான உண்மை.
அபராத வட்டி
இந்த நகைக்கடன் தள்ளுபடி விவகாரத்தில் இன்னொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், வட்டி கணக்கீடு மற்றும் அபராத வட்டி குறித்த தெளிவற்ற நிலைதான்..
அதாவது பல ஆண்டுகளாக கடனைத் திருப்பிச் செலுத்தாமல் வைத்திருப்பவர்கள், தள்ளுபடி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வட்டியைக் கூட கட்டாமல் விட்டுவிடுகின்றனர்.. ஆனால், ஒருவேளை அரசு தள்ளுபடி அறிவிக்கும்போது அசல் தொகையை மட்டும் தள்ளுபடி செய்தால் அல்லது குறிப்பிட்ட சதவீதத்தை மட்டும் குறைத்தால், மீதமுள்ள பெரும் தொகையைச் செலுத்துவது சாமானிய மக்களுக்கு சவாலாக மாறிவிடும்..
மக்களுக்கு சலுகைகள்
எனவே, வெறும் தள்ளுபடி செய்திகளுக்காகக் காத்திருக்காமல், வங்கியின் தற்போதைய நிலுவைத் தொகை எவ்வளவு என்பதையும், அரசு அறிவிக்கும் சலுகைகள் யாருக்குப் பொருந்தும் என்பதையும் அவ்வப்போது நேரடியாகச் சென்று உறுதிப்படுத்திக் கொள்வது பாதுகாப்பானது..வெறும் வதந்திகளை நம்பி காலத்தைக் கடத்தினால், இறுதியில் நகையை ஏலத்தில் விடும் நிலை கூட ஏற்படலாம் என்பதால் மக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்..!!
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications