Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. 2 மாஜி அமைச்சர்களுக்கு வாய்ப்பு அளித்த டிடிவி தினகரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை டிடிவி டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். இதன்படி, நாங்குநேரியில் ஆர் இசக்கிமுத்து, மடத்துக்குளத்தில் சண்முகமவேலு, பூந்தமல்லியில் ஏழுமலை, சைதாப்பேட்டையில் செந்தமிழன் போட்டியிடுகிறார்கள். இதில் முன்னாள் அமைச்சர்கள் சி சண்முகவேல், செந்தமிழன் ஆகிய இரண்டு பேருக்கு டிடிவி தினகரன் வய்ப்பு அளித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லை. தேர்தல் தேதி நெருங்குவதால் அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு, பிரச்சாரம் என பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. திமுக தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட உள்ளது.

AMMK TTV Dhinakaran AMMK candidate list AMMK manifesto Tamil Nadu Assembly election 2026

அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அதிமுக சார்பில் 150 தொகுதிகள் போட்டியிடும் வேட்பாளர்கள் லிஸ்டை வெளியிட்டுள்ளது. 17 பெண் வேட்பாளர்களுக்கு இதில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 17 தொகுதிகளுக்கான வேட்பளர்கள் அறிவிப்பு மட்டுமே மீதம் இருக்கிறது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவும் வேட்பாளர்கள் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில்தான் அதிமுக பாஜக் கூட்டணியில் உள்ள அமமுகவும் இன்று வேட்பாளர்கள் லிஸ்டை வெளியிட்டு உள்ளது.

சென்னை அடையாறில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். இந்த தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் 11 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதாவது, சைதாப்பேட்டை, திருப்பத்தூர், ஒட்டபிடாரம், திருவையார், பெரியகுளம், காரைக்குடி , திருச்சி மேற்கு, மன்னார்குடி, பூந்தமல்லி, மடத்துக்குளம், நாங்குநேரி ஆகிய 11 தொகுதிகளில் அமமுக போட்டியிடுகின்றது.

இந்த 11 தொகுதிகளில் யார் யார் களமிறங்குகிறார்கள் என்பதை இன்று காலை 11 மணிக்கு வெளியிட்டுள்ளார் டிடிவி தினகரன். இதன்படி, திருச்சி மேற்கு - ராஜசேகரன்

திருச்சி மேற்கு - ராஜசேகரன்

சைதாப்பேட்டை - செந்தமிழன்

பூந்தமல்லி - ஏழுமலை

மடத்துக்குளம் - சிவி சண்முகவேல்

நாங்குநேரி - ஆர் இசக்கிமுத்து

பெரியகுளம் - கதிர்காமு

மன்னார்குடி - எஸ் காமராஜ்

திருவையாறு - கார்த்திகேயன்

காரைக்குடி - தேர்போகி பாண்டி

திருப்பத்தூர் - ஞானசேகரன்

ஓட்டப்பிடாரம் - சுந்தர்ராஜன்

இதில் முன்னாள் அமைச்சர்கள் சி சண்முகவேல், செந்தமிழன் ஆகிய இரண்டு பேருக்கு டிடிவி தினகரன் வய்ப்பு அளித்துள்ளார்.

அமமுக தேர்தல் வாக்குறுதி

இதேபோல் 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினையும் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ளார். இதில் விவசாய கடன்கள் தள்ளுபடி, கச்சத்த்வீவை மீட்பட்து, 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக மாற்றப்படும். மாதம் ஒரு முறை மின்சார கட்டணம், ஆசிரியர்கள் விரும்பும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படு என்பது உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளையும் அளித்துள்ளார்.

அமமுகவில் இருந்து விலகல்

வேட்பாளர்கள் பெயரை அறிவிக்கும் முன்னரே ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான பார்த்திபன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார். அவர் கூறுகையில், 'இன்று முதல் அமமுகவின் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர், மண்டல பொறுப்பாளர், கழக தேர்தல் பிரிவு செயலாளர் பதவியிலிருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் என்னை விடுவித்துக் கொள்கிறேன்' என்று தெரிவித்து உள்ளார்.

பார்த்திபனுக்கு டிடிவி தினகரன், சோளிங்கர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தருவதாக கூட்டணி அமைவதற்கு முன்னதாக சொன்னதாகவும், ஆனால் தற்போது கூட்டணியில் அத்தொகுதி பாமகவுக்கு வழங்கப்பட்டுவிட்டதாலும் கட்சியில் இருந்து விலகியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதேபோன்று அமமுகவின் துணைப் பொதுச் செயலாளர் எம். ரெங்கசாமி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+