அரசு ஊழியர்களின் முதல் தேர்வு தேனி, கன்னியாகுமரி.. டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் விரும்புவது ஏன்
சென்னை: டிஎன்பிஎஸ்சி கவுன்சிலிங்கில் டாப் மதிப்பெண் பெற்றவர்களுக்குத்தான் தங்களுக்குப் பிடித்த மாவட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் இருக்கும். தேனி, கன்னியாகுமரி, மற்றும் கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்கள் கவுன்சிலிங் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே "புல்" ஆகிவிடும். இதற்குப் பின்னால் இருப்பவர்கள் வேறு வழியின்றி சென்னை, காஞ்சிபுரம் அல்லது திருவள்ளூர் போன்ற மாவட்டங்களைத் தேர்வு செய்ய வேண்டியிருக்கும். குறிப்பாக தேனி கன்னியாகுமரி இந்த இரண்டு மாவட்டங்களில் அரசு வேலையில் சேருவது அவ்வளவு எளிதானது கிடையாது. ஏன் என்பதை பார்ப்போம்.
தேனி கன்னியாகுமரி இந்த இரண்டு மாவட்டங்களில் அரசு வேலையில் சேருவது அவ்வளவு எளிதானது கிடையாது.. மற்ற மாவட்டங்களில் 165 கேள்விகளுக்குச் சரியான பதில் அளித்தவருக்கு வேலை கிடைத்தால், தேனி அல்லது கன்னியாகுமரியில் வேலை கிடைக்க 175+ கேள்விகளுக்கு மேல் சரியாகப் பதிலளிக்க வேண்டியிருக்கும். மாநில அளவில் டாப் ரேங்க் எடுப்பவர்கள் மட்டுமே இந்த இரண்டு மாவட்டங்களைச் சொந்தமாக்க முடியும்.

அரசு வேலை
அரசுப் பணியிடங்களுக்கான கலந்தாய்வில் மாநில அளவில் டாப் இடங்களை பிடிப்பவர்கள் போட்டி போட்டுக்கொண்டு தேர்ந்தெடுப்பது தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைத்ன். எனவே தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் அரசு வேலை பெறுவது என்பது, "இமயமலையில் ஏறுவது போன்ற" ஒரு கடினமான இலக்காக இருக்க காரணங்கள் வலுவாக உள்ளன. ஆச்சரியமானதாக தெரிந்தாலும்.. உண்மை அதுதான்..
டாப் இடங்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை தமிழகத்திலேயே அதிக எழுத்தறிவு கொண்ட மாவட்டம். அங்குள்ள ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒரு பட்டதாரியாவது இருப்பார்கள். சிறுவயதிலிருந்தே அரசு வேலைக்கான பயிற்சியும், விழிப்புணர்வும் அங்கு அதிகம். தேனியை பொறுத்தவரை தென் மாவட்டங்களில் கல்வி மற்றும் வேளாண்மை சார்ந்த முன்னேற்றம் அதிகம். இங்கிருந்து வரும் மாணவர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் மாநில அளவில் டாப் இடங்களைப் பிடிப்பது வழக்கமாக இருக்கிறது.
'கட்-ஆஃப்' மதிப்பெண் உச்சம்
டிஎன்பிஎஸ்சி கவுன்சிலிங்கில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்கப்படும். மற்ற மாவட்டங்களில் 165 கேள்விகளுக்குச் சரியான பதில் அளித்தவருக்கு வேலை கிடைத்தால், தேனி அல்லது கன்னியாகுமரியில் வேலை கிடைக்க 175+ கேள்விகளுக்கு மேல் சரியாகப் பதிலளிக்க வேண்டியிருக்கும். அதாவது, மாநில அளவில் டாப் ரேங்க் (Top Rank) எடுப்பவர்கள் மட்டுமே இந்த இரண்டு மாவட்டங்களைச் சொந்தமாக்க முடியும்.
'மியூச்சுவல் டிரான்ஸ்பர்' சிக்கல்
ஒரு அரசு ஊழியர் தேனி அல்லது கன்னியாகுமரிக்கு மாற விரும்பினால், அங்கிருந்து யாராவது ஒருவர் வெளியே வர சம்மதிக்க வேண்டும். ஆனால், ஒருமுறை அங்கே வேலை கிடைத்துவிட்டால், அங்கிருந்து யாரும் வெளியேற விரும்புவதில்லை. "யாரும் வெளியே போகாத ஊருக்குள், எப்படிப் புது ஆட்கள் உள்ளே வர முடியும்?" என்பதுதான் இங்குள்ள மிகப்பெரிய எதார்த்தம்.
கன்னியாகுமரி
மூன்று பக்கம் கடல், ஒரு பக்கம் மலை என இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டம். கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர்கள்கடவுளின் தேசத்தில் வாழ்வது போன்ற வாழ்க்கையை அனுபவிப்பவர்கள்.. அவ்வளவு எளிதாக அங்கிருந்து சென்னைக்கோ, கடலூருக்கோ வர விரும்பமாட்டார்கள்..
தேனி
அதேபோல் தேனி மாவட்டத்தை பொறுததவரை வற்றாத ஆறுகள், பசுமையான விவசாய நிலங்கள், மேகமலை, கொடைக்கானல், தேக்கடி, மூணாறு, வாகமன் என இதமான காலநிலை கொண்ட சுற்றுலா தலங்களை எல்லையில் கொண்ட மாவட்டம் ஆகும்.. அருவிகள் மிக அதிகம். வாழ்க்கை செலவு மிகவும் குறைவு. சமூக அந்தஸ்து மிக அதிகம். எனவே தேனி, கன்னியாகுமரி ஆகிய இரண்டு மாவட்டங்களுமே "ஓய்வுக்காலத்திற்கு ஏற்ற இடங்கள்" என்று அழைக்கப்படுகின்றன. அதனால், அங்கு சேருபவர்கள் அங்கேயே வேரூன்றி விடுகிறார்கள்.
பதவி உயர்வு வேண்டாம்
பல நேரங்களில் சென்னை போன்ற இடங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், தங்களுக்குப் பதவி உயர் கிடைக்கும்போது கூட, "வேண்டாம், நான் இங்கேயே (தேனி/கன்னியாகுமரி) ஜூனியர் பதவியிலேயே இருந்து கொள்கிறேன், என்னை வேறு மாவட்டத்திற்கு மாற்றாதீர்கள்" என்று எழுதிக்கொடுக்கும் நிகழ்வுகளும் நடந்துள்ளது.
காவலர்களின் விருப்பம்
சென்னையில் வேலை பார்த்தால் இடமாற்றம் என்பது அடிக்கடி நடக்க வாய்ப்புண்டு. ஆனால் தேனி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட தாலுகாவிற்குள்ளேயே பல ஆண்டுகள் பணியாற்ற முடியும். இது ஒரு அரசு ஊழியருக்குப் பெரும் மனநிம்மதியைத் தருகிறது. இன்று மட்டும் அரசு தென் மாவட்ட காவலர்கள் அவர்கள் சொந்த ஊரில் போய் வேலை செய்யலாம் என அறிவித்தால், சுமார் 70 சதவீதம் காவாலர்களின் தேர்வு, தேனி, கன்னியாகுமரியாகத்தான் இருக்கும்..அது தான் எதார்த்தம்.. தேனி, கன்னியாகுமரியில் அரசு வேலைகள் காலியிடங்களை கவனித்தால் இந்த எதார்த்தம் உங்களுக்கு புரியும்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை














Click it and Unblock the Notifications