For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத்தில் மோடி பிரதமராக 46% பேர் மட்டுமே ஆதரவு: சி.என்.என்.-ஐபிஎன் கருத்து கணிப்பு

By Mathi
|

அகமதாபாத்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராவதற்கு குஜராத் மாநிலத்திலேயே 46% பேர் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறுகிறது சி.என்.என்.-ஐபிஎன் கருத்து கணிப்பு.

லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகிறது சி.என்.என்.-ஐபிஎன். ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு அம்சங்களை முன்வைத்து இக்கருத்து கணிப்பு வெளியிடப்படுகிறது.

பாஜக அணிக்குதான் அமோகம்!

பாஜக அணிக்குதான் அமோகம்!

குஜராத் மாநிலத்தைப் பொறுத்தவரையில் மொத்தமுள்ள 26 தொகுதிகளில் பெரும்பாலானவற்றை பாஜக அணிதான் கைப்பற்றும் என்கிறது இக்கருத்து கணிப்பு.

மோடிக்கு 46%

மோடிக்கு 46%

அத்துடன் யார் பிரதமர் வேட்பாளர் என்ற கருத்து கணிப்பு முடிவும் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி வருவதற்கு அவரது சொந்த குஜராத் மாநிலத்தில் மொத்தம் 46% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ராகுலுக்கு 15%

ராகுலுக்கு 15%

எஞ்சிய 54% பேரில் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று 15% பேரும் சோனியாவுக்கு 6%, மன்மோகன்சிங்குக்கு 2% பேரும் கேஜ்ரிவாலுக்கு 5% பேரும் ஆதரவு தருகின்றனராம்..

நோ கமெண்ட்ஸ் 25%

நோ கமெண்ட்ஸ் 25%

அத்துடன் எந்த கருத்தும் சொல்ல முடியாது என்று 25% பேர் கூறியுள்ளனராம். அதாவது குஜராத் மாநிலத்திலேயே 54% பேர் மோடி பிரதமராவதற்கு எதிராக இருக்கின்றனர் என்கிறது சி.என்.என்.-ஐபிஎன் கருத்து கணிப்பு.

English summary
In his home state, 46 per cent respondents want Narendra Modi to be the next PM. Just 15 per cent want Rahul Gandhi to be the next PM and 25 per cent respondents have no opinion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X