"நீ யாரா வேணாலும் இரு.. இது எங்க ஏரியா..” - புலிகளையே ஓட ஓட விரட்டிய சேட்டைக் குரங்கு!

Subscribe to Oneindia Tamil

காத்மாண்டு: தன் எல்லைக்குள் வந்த புலிகளை தனி ஒருவனாக நின்று அவற்றை ஓட ஓட விரட்டிய குரங்கின் வீடியோ காண்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.
விலங்குகளின் உலகமே சுவாரசியமானது தான். அதிலும் குரங்குகளை பற்றி கேட்கவே வேண்டாம். இயற்கையிலேயே சேட்டையும், குசும்பும் நிறைந்த குரங்குகளை பார்த்தாலே நமக்கு ஒருவித சந்தோஷம் தொற்றிக் கொள்ளும். எந்தவொரு குரங்கும் சோம்பலாக இருந்து நாம் பார்க்க முடியாது. எப்போதும் சுறுசுறுப்பாகவும், சக குரங்குகளை சீண்டியபடி சேட்டைகளையும் செய்து கொண்டிருப்பதும் தான் குரங்குகளின் சிறப்பம்சமே.

இவ்வாறு ஒருபுறம் சேட்டையும், குறும்புமாக இருக்கும் குரங்குகளுக்கு மற்றொரு பக்கமும் உண்டு. அதுதான் அவற்றின் மூர்க்க குணம். குரங்குகளை வம்புக்கு இழுத்தால் மட்டுமே அதன் மூர்க்க குணம் வெளிப்படும். அந்த சமயத்தில், எதிரில் இருப்பது எப்படிப்பட்ட விலங்கு, அதனுடன் மோதலாமா வேண்டாமா என்பதை எல்லாம் குரங்குகள் யோசிக்காது. தன் உயிரே போனாலும் பரவாயில்லை என எதிரியுடன் சண்டையிட்டு அதை ஒருவழி செய்துவிடும். அதேபோல, குரங்குகள் கூட்டம் கூட்டமாக வாழ்பவை என்பதால் தங்களுக்கென ஒரு எல்லையை நிர்ணயித்துக் கொள்ளும். அந்த எல்லையை தாண்டி மற்ற குரங்குகளோ அல்லது விலங்குகளோ வந்துவிட்டால் அவ்வளவுதான். தன் எல்லையை விட்டு அந்த விலங்குகளை விரட்டும் வரை குரங்குகள் ஓயாது. இதற்கு சான்றாக இருக்கும் ஒரு வீடியோதான் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது.

 குரங்கின் எல்லைக்குள் நுழைந்த புலி

குரங்கின் எல்லைக்குள் நுழைந்த புலி

நேபாளத்தில் உள்ள ஒரு காட்டில் புலிகளின் வாழ்க்கையை அவற்றுக்கு தெரியாமல் படம்பிடிப்பதற்காக ஒரு தொலைக்காட்சி குழுவினர் அங்குள்ள மரங்களில் ஏராளமான ஸ்பை கேம்களை (உளவு கேமரா) வைத்துள்ளனர். சுமார் ஒரு மாதம் கழித்து அந்த கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்த்த அந்த தொலைக்காட்சிக் குழுவினர் ஆச்சரியத்தில் மூழ்கினர். அப்படிப்பட்ட சுவாரசியமான காட்சிதான் அதில் பதிவாகி இருந்தது. அதாவது, புலிகளில் அதிகம் வாழும் அந்தக் காட்டில் வளரிளம் பருவத்தில் உள்ள மூன்று ஆண் புலிகள், 'கிப்பான்' என அழைக்கப்படும் ஒரு வகை குரங்குகளின் எல்லைக்குள் தெரியாமல் வந்துவிட்டன.

 புலிகளை விரட்ட முயற்சி

புலிகளை விரட்ட முயற்சி

தங்கள் எல்லைக்குள் புலிகளை பார்த்ததும் அந்தக் குரங்குகள் பயங்கரமாக சத்தம் போட்டு அவற்றை விரட்ட முயற்சித்தன. ஆனால் நாம்தான் புலிகள் ஆச்சே.. குரங்குகளால் நம்மை என்ன செய்துவிட முடியும் என்ற தொனியில் அந்த புலிகள் தெனாவட்டாக அந்தப் பகுதியை சுற்றி வந்தும், ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டும் விளையாடின. பொறுமை இழந்த அந்தப் புலிகள், "குருநாதா இதுக்கு மேல தாங்க முடியாது குருநாதா" என்ற ரேஞ்சுக்கு சென்று தங்கள் தலைவனை அங்கு அழைத்து வந்தன. வந்திருப்பதோ மூன்று புலிகள். இதனுடன் நேருக்கு நேர் சண்டையிட்டால் வேலைக்கு ஆகாது என நினைத்த அந்தக் குரங்கு, புலிகளை விரட்ட வேறு ஒரு ஐடியா செய்தது.

 புலிகளை வெறுப்பேற்ற முடிவு

புலிகளை வெறுப்பேற்ற முடிவு


புலிகள் எப்போதுமே தனக்கு தொந்தரவு இல்லாத பகுதியில்தான் தனது எல்லையை நிர்ணயிக்கும். தொந்தரவுகள் இருந்தால் அந்தப் பகுதியில் இருக்காது. இதை அறிந்த அந்தக் குரங்கு, தனது இயல்பான சேட்டையின் மூலம் புலிகளை வெறுப்பேற்ற முடிவு செய்தது. அதன்படி, கீழே விளையாடிக் கொண்டிருந்த புலிகளை ஒன்றன் பின் ஒன்றாக அடிக்க தொடங்கியது. அதாவது, புலிகள் தங்களை மறந்து விளையாடிக் கொண்டிருக்கும் போது, ஒவ்வொரு மரமாக ஒளிந்து ஒளிந்து செல்லும் குரங்கு, ஒரு புலியின் கன்னத்தில் பளார் என அறைகிறது. அடிவாங்கிய புலியோ, கண்கள் சிவக்க அந்தக் குரங்கை விரட்டிச் செல்கிறது. குரங்கை பிடிக்க முடியுமா..? குரங்கு ஓடிச்சென்று மரக்கிளைகளை பிடித்து தாவித் தாவி சென்றுவிடுகிறது.

 குரங்கு சேட்டை

குரங்கு சேட்டை

அதன் பின்னர், சிறிது நேரம் கழித்து மரத்தை விட்டு இறங்கும் அந்தக் குரங்கு, மற்றொரு புலியின் வாலை பிடித்து இழுத்துவிட்டு இதே போல ஓடி மறைகிறது. புலிகளும் அந்தக் குரங்கை விரட்டி விரட்டி களைத்துப்போய் விடுகின்றன. புலிகள் களைப்பானதை தெரிந்து கொண்ட குரங்கு, தற்போது சாவகாசமாக வந்து ஒரு புலியின் காதை பிடித்து, வாத்தியாரை போல தரதரவென இழுத்து செல்கிறது. கோபத்தின் உச்சிக்கே சென்ற அந்த புலி, குரங்கை விரட்டுகிறது. ஆனால் இந்த முறை மரத்துக்கு மேலே கஷ்டப்பட்டு குரங்கு ஏறவில்லை. அசால்ட்டாக, தாழ்வாக இருக்கும் ஒரு மரக்குச்சியை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறது.

ஆளவிடுடா சாமி..

ஆளவிடுடா சாமி..

அந்த மூன்று புலிகளும் எகிறி எகிறி குரங்கை கடிக்க முயற்சிக்க, அந்தக் குரங்கோ ஜிம்னாஸ்டிக் வீரனைப் போல அந்த மரக்கிளையை பிடித்து பல்டி அடித்தவாரே அந்த புலிகளை தலையிலும், முகத்திலும் சரமாரியாக அறைகிறது. குரங்கின் இந்த தொல்லையால் விரக்தியின் உச்சிக்கே சென்ற அந்த புலிகள், "இருடா.. கொஞ்சம் வளர்ந்ததற்கு அப்புறம் வந்து உன்ன கவனிச்சிக்கறோம்" என்பது போல பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு அங்கிருந்து நடையை கட்டின. அதன் பின்னர், குரங்கின் எல்லைக்குள் அந்த புலிகள் தலை வைத்தும் படுக்கவில்லை. இந்த வீடியோவை பார்த்தவர்கள், சிரித்து சிரித்து தங்கள் வயிறு புண்ணாகி விட்டதாக கமெண்ட்டில் தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+