For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரதமர் மோடி முன்பு பாடல்கள் பாடிய பாரத ரத்னா எம் எஸ். சுப்புலட்சுமியின் கொள்ளுப்பேத்திகள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    மோடி முன்பு பாடிய எம் எஸ். சுப்புலட்சுமியின் கொள்ளுப்பேத்திகள்-வீடியோ

    டெல்லி: பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது கொள்ளுப்பேத்திகள் பிரதமர் மோடியை சந்தித்து ஸ்ரீசந்திரசேகர் சரஸ்வதி சுவாமிகள் இயற்றிய மைத்ரீம் பஜத என்று தொடங்கும் பாடலை பாடினர்.

    இந்தியாவின் மிகச்சிறந்த கர்நாடக இசைப்பாடகி பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமி 1916ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி மதுரையில் பிறந்தார்.

    MS Subbulakshmi’s great-granddaughters meet PM Modi

    இவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு டெல்லியில் 'குறையொன்றுமில்லை' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்பட்டது. 100 ரூபாய், 10 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டது.

    இந்த நாணயங்களை வெளியிட்டு பேசிய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி எனப்படும் எம்எஸ் சுப்புலட்சுமி, தனது கர்நாடக இசைப்பாடலால் அனைவரையும் கவர்ந்தவர் என்று புகழ்மாலை சூட்டினார்.

    சரோஜினி நாயுடு அவர்களால் இந்தியாவின் நைட்டீங்கேல் என்றும் பாடகி லதா மங்கேஷ்கரால் தபஸ்வினி என்றும் பாராட்டப் பெற்றவர் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் இறைவணக்கப் பாடலை எம்எஸ் சுப்புலட்சுமி இவர்களின் கொள்ளுப்பேத்திகள் ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா பாடினர்.

    இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா ஆகியோர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். அவர் முன்பாக கர்நாடக இசைப்பாடல்கள் பாடினர்.

    ஜகத்குரு காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சசாரியார் ஸ்ரீசந்திரசேகர் சரஸ்வதி சுவாமிகள் இயற்றிய மைத்ரீம் பஜத என்று தொடங்கும் பாடலை பிரதமர் முன்பு சுப்புலட்சுமியின் கொள்ளுப்பேத்திகள் பாடினர்.

    சுப்புலட்சுமிக்கு ஐநா சபையில் பாடுவதற்கு அழைப்பு வந்ததையடுத்து, அந்த சபையில் பாடுவதற்காக இந்த பாடல் இயற்றப்பட்டது. சுப்புலட்சுமியின் ரத்தத்தோடு இசையும் சேர்ந்து, அவருடைய பேத்திகளுக்கு வந்துள்ளதால், சுருதி மாறாமல், அதே குரல்போல பாடினர். மெய்மறந்து ரசித்த பிரதமர் மோடி பாடலை பாடிய இருவரையும் பாராட்டினார்.

    English summary
    S Aishwarya and S Saundarya, great-granddaughters of legendary Carnatic singer MS Subbulakshmi on Tuesday called on Prime Minister Narendra Modi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X