For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'சத்யம்' ராமலிங்க ராஜூ மீதான வழக்கில் இறுதித் தீர்ப்பு ஏப்.9-க்கு ஒத்திவைப்பு: சி.பி.ஐ. நீதிமன்றம்

By Mathi
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன அதிபர் ராமலிங்க ராஜூ மீதான வருமான வரி மோசடி வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 9-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படும் என்று ஹைதராபாத் சி.பி.ஐ. நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்தது. இதில் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Much-Awaited Verdict in Satyam Fraud Case Likely Today

இதுதொடர்பாக 2009 ஜனவரி 7ம் தேதி, சத்யம் நிறுவன அதிபர் ராமலிங்க ராஜூ கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம், மோசடி வழக்கில் ராமலிங்க ராஜூ, அவரது சகோதரர் ராமராஜூ ஆகியோருக்கு 6 மாத சிறை தண்டனையும் அபராதமும் விதித்தது.

சத்யம் மோசடியின் மற்றொரு வழக்கில் கடந்த டிசம்பர் 23-ந் தேதி தீர்ப்பு அளிப்பதாக இருந்தது. சி.பி.ஐ. விசாரித்து வரும் இந்த வழக்கில் 3,000 ஆவணங்கள், 226 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் ஏப்ரல் 9-ந் தேதி இறுதித் தீர்ப்பு வழங்குவதாக ஹைதராபாத் சி.பி.ஐ. நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

ராமலிங்க ராஜூவின் எதிர்காலம் சிறையிலா? அல்லது வெளியிலா என்பதை ஏப்ரல் 9-ந் தேதி தீர்ப்பு தெரிவிக்கும்.

English summary
A special court is, today, slated to pronounce in Hyderabad the much-awaited judgement in the multi-crore accounting fraud in erstwhile Satyam Computer Services Limited (SCSL).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X