ரம்ஜானை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு.. ஆந்திர அரசு அதிரடி சலுகை! என்ன தெரியுமா?
அமராவதி: ஆந்திராவில் ரம்ஜான் மாதத்தையொட்டி முஸ்லிம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒரு மணிநேரத்துக்கு முன்பாக வீட்டுக்கு செல்லலாம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி அம்மாநில முஸ்லிம் அரசு ஊழியர்களுக்கு ஜெகன்மோகன் ரெட்டி அரசு சலுகை ஒன்றை வழங்கி உள்ளது.

ஒருமணி நேரம் முன்னதாக
அதன்படி ரம்ஜான் மாதமான ஏப்ரல் 3ம் தேதி முதல் மே மாதம் 2ம் தேதி வரை முஸ்லிம் ஊழியர்கள் ஒரு மணிநேரம் முன்னதாக வீட்டுக்கு செல்லலாம் எனும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமை செயலாளர் சமீர் ஷர்மா உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆசிரியர்கள் உள்பட...
மாநிலத்தில் அரசு பணியில் நிரந்தரமாக, ஒப்பந்த அடிப்படையில் மற்றும் அவுட்சோர்சிங் முறையில் பணிபுரிந்து இஸ்லாமை பின்பற்றும் அனைவரும் தங்கள் அலுவலகங்களில் இருந்து ஒருமணிநேரம் முன்பு கிளம்பி செல்லலாம். இது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கும் பொருந்தும்.

நகல் அனுப்பி வைப்பு
இந்த நடைமுறை 03.04.2022 முதல் 02.05.2022 வரை அமலில் இருக்கும். இந்த காலக்கட்டத்தில் தேவை ஏற்படும்போது தவிர பிற நேரங்களில் ஒரு மணிநேரத்துக்கு முன்பு வீட்டுக்கு செல்லலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நகல் அனைத்து துறை செயலாளர்கள், துறை சார்ந்த தலைமை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள், பள்ளி கல்வித்துறை கமிஷனர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பாராட்டு
இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கர்நாடகத்தில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிரான செயல்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் ஆந்திரா அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications