கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களுக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

டெல்லி : கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி

1956ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி இந்தியாவில் பல புதிய மொழிவாரி மாகாணங்கள் உருவாக்கப்பட்டது. கேரளா, கர்நாடகா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு நேரு அரசு இதற்கான உத்தரவை பிறப்பித்தது.

Narendra Modi greets citizens of concerned states on state formation day

திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து உருவான இந்த நாளை கேரளா மாநிலம் கேரள பிறவி விழாவாகக் கொண்டாடி வருகிறது. இதற்கு பிரதமர் நரேந்திரமோடி கேரளாவிற்கும், கேரள மக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அதுபோல கர்நாடகவும் இந்த நாளை கர்நாடக ராஜ்யோத்சவா விழாவாகக் கொண்டாடிவருகிறது. அவர்களுக்கும் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மத்தியபிரதேச மக்களுக்கும் மொழிவாரி மாநிலமாக உருவான நாளுக்கான வாழ்த்தை பகிர்ந்துள்ளார் மோடி. அதுபோலவே சட்டீஸ்கர் மாநிலம் 16 மாவட்டங்களோடு 2000ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதற்கான வாழ்த்துச் செய்தியையும் ட்விட்டரில் மோடி பதிவிட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Prime Minister Narendra Modi greeted people of Kerala, Madhya Pradesh, Chhattisgarh and Karnataka, the four states that are celebrating their formation day.
Please Wait while comments are loading...