மீனவர்கள் விடுதலை: ராஜபக்சே, மோடிக்கு நாடு நன்றிக் கடன்பட்டுள்ளது - சு.சுவாமி
டெல்லி: இருநாட்டின் தலைவர்கள் மேற்கொண்ட முயற்சியால் 5 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைவர்களின் கூட்டு முயற்சிக்கு நாடு நன்றிகடன்பட்டுள்ளதாக பாஜகவின் சுப்பிரணிய சாமி தெரிவித்துள்ளார். தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருந்த 5 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு அவர் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"தமிழக மீனவர்களின் உணர்ச்சி அழுத்தம் நிறைந்த இந்தப் பிரச்சினைக்கு இலங்கை அதிபர் ராஜபக்ச, மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் கூட்டு முயற்சியால் விளைந்த தீர்வுக்கு நாடு நன்றிக் கடன்பட்டுள்ளது.
மேலும், இந்த மீனவர்களை இந்தியாவுக்கு மாற்றுவதற்கு உதவும் 2010ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை நான் இருவரின் (ராஜபக்சே, மோடி) கவனத்திற்கு கொண்டு சென்றது பற்றி மிக்க மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.
இருநாடுகளும் பரஸ்பர மரியாதை மற்றும் உரையாடல் மூலம் முறிவு கண்ட உறவுகளை சரி செய்ய வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் கோரிக்கை வைத்துள்ளார்.