For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விராட் கோலியின் தீபாவளி அறிவுரைக்கு எதிர்ப்பு - சமூக ஊடகங்களில் கொதிக்கும் நெட்டிசன்கள்

By BBC News தமிழ்
|
விராட் கோலி
Getty Images
விராட் கோலி

விராட் கோலி தன் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் இந்த தீபாவளி பண்டியைகை எப்படி அர்த்தமுள்ளதாகக் கொண்டாடுவது என சில குறிப்புகளைப் பகிர உள்ளதாகக் கூறி இருந்தார். ஆனால், அவருடைய இந்த கருத்துக்கு பலத்த எதிர்ப்பு சமூக ஊடகங்களில் காணப்படுகிறது.

எங்கள் பண்டிகைகளைக் கொண்டாட எங்களுக்குத் தெரியும், அதற்கு உங்கள் ஆலோசனைகள் தேவை இல்லை என்கிற ரீதியில் சிலரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கோலியின் அந்த ட்விட்டர் பதிவு பதிலளிக்கும் வகையில் பலரும் தங்களுடைய எதிர்வினைகளை பதிவு செய்து வருகின்றனர்.

என்ன பிரச்னை?

பண்டிகை காலங்களை முன்னிட்டு நிறுவனங்கள் தங்கள் பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்து விளம்பரப்படுத்துவது உலக அளவில் நடக்கும் ஒரு பொதுவான விஷயம் தான். அப்படி இந்த முறை விராட் கோலி மற்றும் பின்ட்ரெஸ்ட் நிறுவனம் இணைந்து, அந்த நிறுவன சமூக வலைதளத்தை விளம்பரப்படுத்த முயற்சி செய்துள்ளதாகத் தெரிகிறது.

https://twitter.com/imVkohli/status/1449699978419466243

இந்த தீபாவளிப் பண்டிகையை அன்புக்குரியவர்களோடும் குடும்பத்தோடும், அர்த்தமுள்ளதாகக் கொண்டாட நான் சில சொந்த குறிப்புகளைப் பகிர உள்ளேன். அதற்கு என் பின்ட்ரெஸ்ட் கணக்கைப் பின் தொடருங்கள் என அக்டோபர் 17ஆம் தேதி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி.

பின்ட்ரெஸ்ட் வலைதளத்தில், தன் கணக்கிலிருந்து விராட் கோலி தனக்கு பிடித்த உணவு, ஆடை போன்றவைகளைப் பதிவிட்டுள்ளார். இதற்கு பின்ட்ரெஸ்ட் வலைதளத்தில் பெரிதாக எதிர்ப்பு கிளம்பவில்லை.

https://twitter.com/coolfunnytshirt/status/1449729532454326274

ஆனால் ட்விட்டரில் சிலர் கோலியின் இந்த பதிவை கடுமையாக எதிர்த்துள்ளனர்.

"விராட்... நீங்களும் அனுஷ்காவும் தீபாவளி, ஹோலி, தசரா, ஜன்மாஷ்டமி, சிவராத்திரி, துர்கா பூஜை, விநாயகர் சதுர்த்தி... போன்ற பண்டிகளை இந்துக்கள் எப்படி கொண்டாட வேண்டும் என வழிமுறைகளைக் கொண்ட புத்தகத்தை வெளியிட முடியுமா? எதுவெல்லாம் அர்த்தமற்ற பண்டிகை மற்றும் எதுவெல்லாம் அர்த்தமுள்ள பண்டிகை என கூற முடியுமா" என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/Navneet55sharma/status/1449745673172054019

"எங்கள் பண்டிகைகளை எப்படி கொண்டாட வேண்டும் என எங்களுக்கு தெரியும். உங்கள் அறிவைப் பயன்படுத்தி கோப்பைகளை வெல்லுங்கள், அது தான் உங்களுக்கு சாத்தியப்படாமல் இருக்கிறது" என மற்றொருவர் விராட் கோலியின் ட்விட்டை குறிப்பிட்டு பதிலளித்துள்ளார்.

https://twitter.com/MurliMenon6/status/1449760392347934729

"அர்த்தமுள்ள தீபாவளி பண்டிகையை எங்கள் அன்புக்குரியவர்களோடும், குடும்பத்தினரோடும் எப்படி கொண்டாட வேண்டும் என எங்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் அதை பல ஆண்டுகளாக, ஏன் பல தசாப்தங்களாக செய்து வருகிறோம். எனவே அதில் உங்கள் அனுபவம் எங்களை விட மிகக் குறைவு" என மற்ரொருவர் கோலிக்கு பதிலளித்துள்ளார்.

https://twitter.com/MrSinha_/status/1449722110104858624

"ஆக இப்போது அர்த்தமுள்ள தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட நமக்கு கோலி கற்றுக் கொடுப்பார். இத்தனை நாட்களாக இந்துக்கள் அர்த்தமற்ற தீபாவளியைக் கொண்டாடி வந்துள்ளனர்களா?

ஏன் இப்படிப்பட்ட பிரபலங்கள் தங்கள் வேலையைப் பார்க்காமல், எங்கள் பண்டிகைகளைக் குறித்துப் பேசுகின்றனர்? நீங்கள் நல்ல விளையாட்டு வீரர் என்பதால், எதை வேண்டுமானாலும் நீங்கள் உபதேசிக்கலாம் என்று பொருளல்ல" என மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே, கோலி தமது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களின் புரொஃபைல் பக்கத்தில் இணைத்திருந்த பின்ட்ரெஸ்ட் முகவரி லிங்கை நீக்கியிருக்கிறார். ஆனால், அக்டோபர் 17ஆம் தேதி பதிவிட்ட பின்ட்ரெஸ்ட் வலைதளத்தில் தீபாவளி கொண்டாட்டம் பற்றிய துணுக்குகளை தருவதாகக் குறிப்பிடும் கோலியின் இடுகை அப்படியே இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
Netizens has slammed Virat Kohli's comments on Diwali
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X