For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீன எல்லைக்கு புதிய வழித்தடம் அமைத்த இந்தியா.. கைலாஷ் மானசரோவர் பயணிகளுக்கு 3 நாட்கள் மிச்சமாகும்

Google Oneindia Tamil News

டெல்லி: உத்தரகாண்ட் மாநிலம் வழியாக கைலாஷ்-மானசரோவர் செல்வதற்கு விரைந்து செல்வதற்கு வசதியாக உருவாக்கப்பட்ட 78 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலை இன்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கால் திறந்துவைக்கப்பட்டது.

கடல் மட்டத்திலிருந்து 17,000 அடி உயரத்தில், இந்தியா-சீனா எல்லையில் லிபுலேக் பாஸ் வரை செல்லும் இந்த சாலையை, வீடியோ கான்பரன்ஸ் மூலம், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெள்ளிக்கிழமை, திறந்து வைத்தார். இது உத்தரகாண்டின் பித்தோராகரில் உள்ள தர்ச்சுலா என்ற நகரத்துடன் பாஸை இணைக்கிறது.

 New road for Kailash Mansarovar pilgrims is ready

இணைப்புச் சாலையைத் திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும், இந்த திட்டத்தை மேற்கொண்டுள்ள எல்லை சாலைகள் அமைப்பை (பி.ஆர்.ஓ) வாழ்த்துவதாகவும் சிங் கூறினார்.

கைரோஷ்-மன்சரோவர் யாத்ரா பாதை என்று அழைக்கப்படும் தார்ச்சுலாவிலிருந்து லிபுலேக் (சீன எல்லை) வரை சாலை இதுவாகும். இதனால் யாத்ரீகர்கள் 3 நாட்கள் வரை சேமிக்க முடியும்.

மகாராஷ்டிரா எம்.எல்.சி. தேர்தல்- பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு- ஆட்டத்தை ஆட தயாராகும் காங்.மகாராஷ்டிரா எம்.எல்.சி. தேர்தல்- பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு- ஆட்டத்தை ஆட தயாராகும் காங்.

இந்த திட்டம் நரேந்திர மோடி அரசாங்கத்தால் முன்னுரிமை அளிக்கப்பட்ட ஒன்று. கடுமையான இமயமலை பாறைகள் வழியாக சாலை அமைப்பது தொடர்பானது என்பதால், இந்த வேலை சவாலானது.

 New road for Kailash Mansarovar pilgrims is ready

இந்தியாவில் இருந்து யாத்ரீகர்கள் கைலாஷ் மானசரோவரை மூன்று வழிகள் வழியாக அடையலாம். நேபாளத்தின் காத்மாண்டு, சிக்கிம், உத்தரகண்ட் வழியாக ஒன்று. இது நீண்ட மற்றும் கடினமானவை.

 New road for Kailash Mansarovar pilgrims is ready

உத்தரகண்ட் வழியாக செல்லும் பாதை மூன்று வழிகளை உள்ளடக்கியது. முதல் வழித்தடம் பித்தோராகரில் இருந்து தவகாட் வரை 107.6 கி.மீ நீளமுள்ள சாலையாகும், இரண்டாவது தவாகத்தில் இருந்து கட்டியாப்கார் வரை 19.5 கி.மீ ஒற்றை வழிப் பாதை. மூன்றாவது பாதை கட்டியாப்கார் முதல் சீன எல்லையில் உள்ள லிபுலேக் பாஸ் வரை 80 கி.மீ. வரையிலானது. இங்கு நடந்து மட்டுமே பயணிக்க வேண்டும். இந்தியா-சீனா பாஸ் வரை ஐந்து நாட்கள் ஆகும். இப்போது இதில் 3 நாட்கள் குறையும்.

English summary
A new and faster road route through Uttarakhand to reach Kailash Mansarovar, a pilgrimage site nestled in the Himalayas in Tibet, is complete and will soon be open to pilgrims, saving them time and an arduous trek of five days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X