For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விவசாய பொருட்களை கொண்டு செல்ல ரயில் மற்றும் விமான சேவை.. பட்ஜெட்டில் 16 அம்ச திட்டங்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: விவசாயத் துறை ஊக்கத்திற்கு 16 அம்ச திட்டங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

2020-2021-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது அவர் தனது உரையை தொடங்கினார்.

Nirmala Sitharaman announces 16 projects for Agriculture sector

விவசாயத்துறை ஊக்கத்திற்கு 16 அம்ச திட்டங்களை அறிவித்தார் நிர்மலா சீதாராமன். அவர் கூறுகையில்

விவசாயிகளுக்கு கடன் வழங்க 15 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விவசாயத் துறைக்கு பட்ஜெட்டில் 2.83 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு

ஊரக மேம்பாட்டிற்காக ரூ 1.23 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும்.

கடந்த பட்ஜெட்டை விட இந்த பட்ஜெட்டில் விவசாயத் துறைக்கு ரூ 12,955 கோடி அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் கூசும் திட்டத்தின் கீழ் மண்ணெண்ணெய்க்காக மற்ற நாட்டை சார்ந்திருக்கும் நிலை கைவிடப்பட்டு சூரிய சக்தி மின்சாரம் பயன்படுத்தப்படும். சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் இயந்திரங்கள் அமைக்க 20 லட்சம் விவசாயிகளுக்கு நிதிஉதவி செய்யப்படும்.

உரங்களை சீரான முறையில் பயன்படுத்த மத்திய அரசு ஊக்குவிக்கும். ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் உரங்களை சீரான முறையில் பயன்படுத்துவது முக்கியமானதாகும்.

விரைவில் அளிக்கக்கூடிய காய்கறி பழங்கள் நுகர்வோரை விரைவில் சென்றடைய கிருஷி உடான் என்ற புதிய திட்டத்தின் மூலம் தேசிய மற்றும் சர்வதேச விமான போக்குவரத்து மூலம் விவசாய பொருட்களை எடுத்துச் செல்ல வசதி ஏற்படுத்தப்படும் - நிர்மலா சீதாராமன்

2022 ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும். 2025-ஆம் ஆண்டுக்குள் பால் உற்பத்தியை இரண்டு மடங்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பால், பழங்கள், காய்கறிகளைக் கொண்டு செல்ல தனி ரயில்கள் இயக்கப்படும்.

ஆடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு அடிபாதத்திலும் வாயிலும் ஏற்படும் நோயை 2025-இல் ஒழிப்பதே இந்த அரசின் நோக்கம்.

2025-ஆம் ஆண்டில் 53.5 மில்லியன் மெட்ரிக் டன் பால் உற்பத்தியை 103 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்த்தப்படும்.

விவசாய கிடங்குகள், குளிர் சாதன சேமிப்பு மற்றும் பிற பொருள்களின் சேமிப்பகங்களை மேப்பிங், ஜியோ டேக்கிங் செய்வதற்கான முயற்சியை நபார்டு மேற்கொள்ளும்.

கிராம சேமிப்பக திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இது முழுக்க முழுக்க பெண்களால் நிர்வகிக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் விளைப் பொருட்களை அதிக அளவில் சேமிக்க உதவும். தளவாட பொருட்களின் செலவை குறைக்கும். இதற்கு அந்த கிராமத்தில் உள்ள பெண்கள் முழு பொறுப்பேற்பர்.

விளைப் பொருட்களைக் கொண்ட தோட்டக் கலைத் துறை உணவு தானியங்களின் உற்பத்தியை தாண்டுகிறது. எனவே ஒரு உற்பத்தி, ஒரு மாவட்டம் என்ற வகையில் கொண்டு செல்வோம்.

மீன் வளத் துறையில் இளைஞர்களை இந்த அரசு ஈடுபடுத்தும். கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் சாகர் மித்ராக்கள் போல் பணியாற்றுவர் என நம்புகிறோம். அது போல் மீன் பண்ணை நிறுவனமும் தொடங்கப்படும் உள்ளிட்ட திட்டங்களை நிர்மலா அறிவித்தார்.

English summary
Finance Minister Nirmala Sitharaman announces 16 projects for Agriculture sector.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X