யூடியூப்பில் தினமும் தோன்றி பேசி வரும் நித்யானந்தா.. இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்!
Recommended Video
அஹமதாபாத்: போலீசார் நித்யானந்தாவை வலைவீசி தேடிவரும் நிலையில் அவர் தினமும் யூடியூப் வீடியோவில் தோன்றி பேசி வருகிறார். இது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
சாமியார் நித்யானந்தா மீது 2010ம் ஆண்டு தொடரப்பட்ட பலாத்கார வழக்கு மற்றும் இந்த ஆண்டு தொடரப்பட்டுள்ள குழந்தைகள் கடத்தல் வழக்கு ஆகியவற்றில் கைது செய்து விசாரிப்பதற்காக குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய இரண்டு மாநில போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
ஆனால் இதுவரை போலீசிடம் நித்தியானந்தா சிக்கவில்லை. அதேநேரம் தனது யூடியூப் சேனலில் தினமும நித்தியானந்தா ஆன்மீக உரையாற்றி வருகிறார்.

பேக்ரவுண்ட் மாற்றம்
நித்யானந்தா யூடியூப் வீடியோவில் தோன்றி பேசினாலும் அவர் எந்த இடத்தில் இருந்து பேசுகிறார் என்பது தெரியவில்லை. ஏனெனில் கிரீன்மேட் தொழில்நுட்பத்தில் பேசும் வீடியோ எடுக்கப்பட்டு பின்னர் வேறு விடியோ திரைகள் ( பேக்ரவுண்ட்) அங்கு வைக்கப்படுகிறது.

துன்புறுத்தும் சக்திகள்
நித்தியானந்தா தனது அந்த வீடியோவில் ஆன்மீகம் குறித்து பேசுகிறார். அத்துடன் அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் இருந்த போதிலும், கடந்த 20 ஆண்டுகளில் ‘சத்சங்'களை தொடர்ந்து வழங்கி வருவது எப்படி, இப்போது தன்னை துன்புறுத்தும் வெளிப்புற சக்திகள் எப்படிஇருக்கிறார்கள் என்பது உள்ளிட்டவற்றை விவரிக்கிறார்.

இமயமலையில் உள்ளேன்
நவம்பர் 28 அன்று, நித்யானந்தா மதியம் 1.30 மணியளவில் யூடியூபில் நேரலை வீடியோவில் பேசியுள்ள நித்தியானந்தா, "எனக்கு எதிராக சிலர் இருக்கிறார்கள், அவர்கள் அவர்கள் என்னைத் தேடுகிறார்கள், ஆனால் நான் இமயமலையில் கைலாயத்தில் இருக்கிறேன்" என்று கூறினார். மேலும் இதற்காக யாரும் "எதிர்வினையாற்ற வேண்டாம்" என்றும் சொல்கிறார். 90 நிமிடங்கள் நீளமுள்ள இந்த வீடியோ,அவரது யூடியூப் சேனலில் உள்ள மற்ற வீடியோக்களைப் போலவே உள்ளது. அந்த வீடியோ கிரின்மேட்டில் எடுக்கப்பட்டு பின்னர் இமயமலை மானசரோவர் திரை வைக்கப்பட்டுள்ளது.

நான் பரம சிவன்
மற்றொரு வீடியோவில், "நான் பரம சிவன். புரிந்து கொள்ளுங்கள், உண்மையை வெளிப்படுத்தியதற்காக எந்த நீதிமன்றமும் என்னைத் தண்டிக்க முடியாது " என்று நித்யானந்தா கூறியுள்ளார். இன்னொரு வீடியோவில், "ஒவ்வொரு முறையும் நாங்கள் அனைத்து சட்ட விவகாரங்கள் மற்றும் சட்ட தாக்குதல்களிலிருந்து தப்பி வருகிறோம்" என்று அவர் கூறுகிறார்.

பல வீடியோக்கள்
கடந்த ஒரு வாரத்தில் வெளியிடப்பட்ட பெரும்பாலான வீடியோக்களில், உலகில் எந்த இடத்தையும் அவர்களுக்குத் தெரியுமா (நான் இருக்கும் சில ஏக்கர் இடம் உள்பட) ? என்று அவர் தனது பக்தர்களிடம் கேட்கிறார், அத்துடன் தன்னை எங்குமே இப்படி துன்புறுத்த மாட்டார்கள் என்ற வேதனை தெரிவித்துள்ளார்.

நித்தி ஓட்டம்
ஆனால் நித்தியானந்தா வெளியிட்ட எந்த வீடியோக்களிலும் அவரது இருப்பிடம் குறித்த எந்த அறிகுறியும் இல்லை. அவர் மீதான குழந்தை கடத்தல் வழக்கை விசாரிக்கும் குஜராத் போலீசார், அவர் நாட்டை விட்டு வெளியேறியிருக்கலாம், தென் அமெரிக்காவில் எங்காவது இருக்கலாம் என்று நம்புகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications